ரங்கநாத் மிஸ்ரா

இந்தியாவின் 21ஆவது தலைமை நீதிபதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரங்கநாத் மிஸ்ரா (Ranganath Mishra) எம்.ஏ., எல்.எல்.எம் (25 நவம்பர் 1926 - 13 செப்டம்பர் 2012) இந்தியாவின் 21 ஆவது தலைமை நீதிபதியாக, 1990 செப்டம்பர் 25 முதல் 24 நவம்பர் வரை பணியாற்றினார். இவர் இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் முதல் தலைவராகவும் இருந்தார்.[1] 1998 முதல் 2004 வரை காங்கிரஸ் கட்சியிலிருந்து மேலவையில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விரைவான உண்மைகள் இரங்கநாத் மிஸ்ரா, 21 ஆம் இந்தியாவின் தலைமை நீதிபதி ...
Remove ads

இளமைக் காலம்

இரங்கநாத் மிஸ்ரா நவம்பர் 25, 1926 அன்று ஒடிசாவில் பானபூரில் பிறந்தார்.இவர் ஓர் ஒரியா கவிஞராகவும் அரசியல்வாதியாகவும் இருந்தார். உயர்நிலைப் பள்ளிப்படிப்பை பானபூரில் படித்தார். மேலும் உயா்கல்வியை பி.எம். கல்விக்கழகத்திலும், பின்னா் இராவென்சா கல்லூரியிலும் அலகாபாத் பல்கலைக்கழகத்திலும் பயின்றாா்.

சட்டத் தொழில் 

இவர் 18 செப்டம்பா் 1950 முதல் கட்டாக்கில் உள்ள ஒடிசா உயர்நீதி மன்றத்தில் முறைப்படி பதிவு செய்துகொண்டு தனது வழக்கறிஞா் தொழிலை மேற்கொண்டார். இவர் 1969 வழக்கறிஞா் தொழில் பயிற்சி பெற்றாா். 1969 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒடிசா உயர்நீதி மன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட பட்டாா். பின்னா் 1980 நவம்பர் 6 ஆம் தேதி முதல் 16 ஜனவரி 1981 வரை அவர் ஒடிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1981 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் தேதி ஒடிசா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர தலைமை நீதிபதியாகவும் பணிபுாிந்தாா். 1983 ஆம் ஆண்டில் அவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதற்கு பின்னா் 1990 செப்டம்பர் 25 இல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991 நவம்பர் 24 அன்று ஓய்வு பெற்றார்.

Remove ads

ஒய்வு மற்றும் இறப்பு

இவர் 1992 ஆம் ஆண்டு முதல் அனைத்து இந்தியா ஆண்கள் சாரணியா் சங்கத்தின் தலைமைச் சாரணராக பணியாற்றினார். 1993 இல் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998 முதல் 2004 வரை அவர் சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியிலிருந்து மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நீண்ட காலத்திற்கு நோய்வாய்பட்டிருந்த பிறகு, இரங்கநாத் மிஸ்ரா புவனேசுவரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் 2012 செப்டம்பர் 13 அன்று இறந்தார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads