ரங்கமதி மாவட்டம்

வங்காளதேசத்தின் சிட்டகாங் கோட்டத்திலுள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

ரங்கமதி மாவட்டம்
Remove ads

ரங்கமதி மாவட்டம் (Rangamati district) (Bengali: রাঙামাটি தெற்காசியாவின் வங்கதேசத்தின் தென்கிழக்கில் சிட்டகாங் கோட்டத்தில் உள்ளது.[1] இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ரங்கமதி நகரம் ஆகும். 6,116 சதுர கிலோ மீட்டர் பரப்புளவு கொண்ட ரங்கமதி மாவட்டம் வங்கதேசத்தில் மிகவும் பெரிய மாவட்டமாகும்.

Thumb
வங்கதேசத்தில் ரங்கமதி மாவட்டத்தின் அமைவிடம்

கிழக்கில் மலைப் பகுதிகள் கொண்ட ரங்கமதி மாவட்டத்தின் கிழக்கில் மியான்மர் மற்றும் இந்தியாவும் எல்லையாக உள்ளது. [2]

Remove ads

வரலாறு

ரங்கமதியின் நிலப்பரப்பிற்காக திரிபுரா இராச்சியம் மற்றும் அரக்கான் இராச்சியத்திற்கிடையே அடிக்கடி பிணக்குகள் ஏற்பட்டது. 1566-இல் முகலாயப் பேரரசின் கீழ் ரங்கமதி பகுதி இணைக்கப்பட்டது.[3] 1737-இல் பழங்குடி இனத் தலைவன் செர் மோஸ்தா கான் என்பவர் மொகலாயர்களிடம் அடைக்கலம் அடைந்த பின் சக்மா இன பழங்குடி மக்கள் ரங்கமதி மாவட்டத்தில் குடியேறினர்.[3] 1760 -1761-இல் ரங்கமதி பகுதி கிழக்கிந்திய கம்பெனிக்கு குத்தகைக்கு விடப்பட்டது.

Remove ads

மக்கள் தொகையியல்

Thumb
பழங்குடியின குழந்தைகள், ரங்கமதி மாவட்டம்

6,116 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ரங்கமதி மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 5,95,979 ஆகும். அதில் ஆண்கள் 3,13,076 ஆகவும், பெண்கள் 2,82,903 அகவும் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 97 நபர்கள் வீதம் உள்ளனர். பாலின விகிதம் நூறு ஆண்களுக்கு 111 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 49.7% ஆக உள்ளது. [4] [5]

இம்மாவட்டத்தின் மக்கள் தொகையில் வங்காளிகள் மற்றும் வங்காளிகள் அல்லாத 11 வகை மலைவாழ் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். பழங்குடி மக்களில் முக்கியமானவர்கள் சக்மா மக்கள், மர்மா மக்கள், தன்சாங்கியா மக்கள், திரிபுரி மக்கள், பன்குவா மக்கள், மிசோ மக்கள், கியாங் மக்கள், முராங் மக்கள் சாக் மக்கள், குமி மக்கள் ஆவார்.

Remove ads

மாவட்ட நிர்வாகம்

துணை மாவட்டங்கள்

ரங்கமதி மாவட்டம் பத்து துணை மாவட்டங்களைக் கொண்டுள்ளது. அவைகள்: பகாய்ச்சாரி, பர்கல், கவாக்ஹாலி, பெலைச்சாரி, கப்தாய், ஜுரைச்சாரி, லங்காடு, நனியார்ச்சார், ராஜஸ்தாலி மற்றும் ரங்கமதி சதர் ஆகும்.

உள்ளாட்சி அமைப்புகள்

ரங்கமதி மாவட்டம் 48 ஊராட்சி ஒன்றியங்களும், 162 ஊராட்சிகளும், 1555 கிராமங்களும், ஒரு மாநகராட்சியும் கொண்டது.

தட்ப வெப்பம்

ரங்கமதி மாவட்டத்தின் குறைந்த பட்ச வெப்ப நிலை 12.5° செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்ப நிலை 36.5° செல்சியசாகவும் உள்ளது. ஆண்டு சராசரி மழை பொழிவு 2673 மில்லி மீட்டராக உள்ளது.

பொருளாதாரம்

நீர் வளம் நிறைந்த ரங்கமதி மாவட்டச் சமவெளிகளில் நெல், சணல், உருளைக்கிழங்கு, பருத்தி, சோளம் மற்றும் ஆமணக்கு பயிரிடப்படுகிறது. மா, பலா, வாழை, பைனாப்பிள் பிளாக்பெரி லிட்சி போன்ற பழவகைகளும் பயிரிடப்படுகிறது. மரங்கள், பலாப்பழம், பைனாப்பிள் மற்றும் காட்டுத் தாவரங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நிலவியல்

சிட்டகாங் கோட்டத்தில் அமைந்த ரங்கமதி மாவட்டத்தின் வடக்கில் இந்தியாவின் திரிபுரா மாநிலமும், தெற்கில் பந்தர்பன் மாவட்டம், கிழக்கில் இந்தியாவின் மிசோரம் மாநிலம்]] மற்றும் மியான்மர் நாட்டின் சின் மாவட்டமும், மேற்கில் சிட்டகாங் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 6,116 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு ஆகும். இம்மாவட்டத்தில் கர்ணாபுலி, தேகா, ஹோரினா, கஸ்சாலோங், சுப்லாங்,சிங்கிரி, ரெயின்கியாங் மற்றும் கப்தாய் ஆறுகள் பாய்கிறது.

Remove ads

கல்வி

இம்மாவட்டத்தில் 291 அரசு துவக்கப் பள்ளிகளும், 120 அரசு சாரா துவக்கப் பள்ளிகளும், 22 இளையோர் பள்ளிகளும் ஆறு அரசு உயர்நிலைப் பள்ளிகளும், 45 தனியார் உயர்நிலைப் பள்ளிகளும், இரண்டு அரசுக் கல்லூரிகளும், 13 தனியார் கல்லூரிகளும், 61 மதராசாக்களும், ஏழு தொழில் பள்ளிகளும், ஒரு மருத்துவக் கல்லூரியும், ஒரு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பல்கலைக்கழகமும் உள்ளது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads