ரங்க்பூர் மாவட்டம்
வங்காளதேசத்தின் ரங்க்பூர் கோட்டத்திலுள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரங்க்பூர் மாவட்டம் (Rangpur Zila) (Bengali: রংপুর জেলা, தெற்காசியா நாடான வங்காள தேசத்தின் வடக்குப் புறத்தில், ரங்க்பூர் கோட்டத்தில் அமைந்துள்ளது. is[1]இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ரங்க்பூர் நகரம் ஆகும்.
புவியியல்
2370 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ரங்க்பூர் மாவட்டம், வங்காள தேசத்தின் ஏழு கோட்டங்களில் ஒன்றான ரங்க்பூர் கோட்டத்தில் அமைந்தள்ளது.
ரங்க்பூர் மாவட்டதின் வடக்கில் நீல்பமாரி மாவட்டம், தெற்கில் கைபந்தா மாவட்டம், கிழக்கில் குரிகிராம் மாவட்டம், மற்றும் மேற்கில் தினாஜ்பூர் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.
இம்மாவட்டத்தில் பாயும் டீஸ்டா ஆறு வேளாண்மைக்கு நீர் ஆதாரமாக உள்ளது. இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம் குறைந்த பட்சம் 11 டிகிரி செல்சியசும், அதிக பட்ச வெப்பம் 32 டிகிரி செல்சியசுமாக உள்ளது. ஆண்டின் சராசரி மழைபொழி 2391 மில்லி மீட்டராக உள்ளது.[2]
Remove ads
வரலாறு
அக்பரின் படைத் தலைவரான இராஜ மான் சிங் 1575-இல் ரங்க்பூர் மாவட்டத்தைக் கைப்பற்றி முகலாயப் பேரரசுடன் இணைத்தார். கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் போது ரங்க்பூர் மாவட்டத்திலும் துறவிகளின் கலகம் நடைபெற்றது.
ஆட்சிப் பகுதிகள்
ரங்க்பூர் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக எட்டு துணை மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள் பதர்கஞ்ச், கங்காச்சாரம், கௌனியா, மிதாபுக்குர், பீர்கச்சா, பீர்கஞ்ச், ரங்க்பூர் சதர், தாராகஞ்ச் ஆகும்.
மக்கள் தொகையியல்
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ரங்க்பூர் மாவட்டத்தின் மொத்த 28, 81,086 ஆகும். அதில் ஆண்கள் 50.91% ஆகவும், பெண்கள் 49.09% ஆகவும் உள்ளனர். மக்கள் தொகையில் இசுலாமியர்கள் 1,866,178 ஆகவும், இந்துக்கள் 88,966 ஆகவும், கிறித்தவர்கள் 5,182 ஆகவும், பிறர் 2,880 ஆகவும் உள்ளனர். எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 1,189,363 ஆக உள்ளனர். வேளாண் துறையில் 530,298 பேரும், தொழில் துறையில் 61,398 பேரும், சேவைத் துறையில் 254,646 பேரும் பணி செய்கின்றனர். ரங்க்பூர் மாவட்டத்தில் பெரும்பாலோர் ரங்க்புரி மொழி மற்று வங்காள மொழிகளும், சிறுபான்மையோர் சாந்தல் மொழியையும் பேசுகின்றனர். [3] இம்மாவட்டத்தின் முக்கியப் பொருளாதாரம் வேளாண்மையைச் சார்ந்து உள்ளது.
Remove ads
கல்வி
ரங்க்பூர் மாவட்டத்தில் பேகம் ரோகெய பல்கலைக்கழகம், ரங்க்பூர் மருத்துவக் கல்லூரி, கார்மைக்கேல் கல்லூரி[4]ரங்க்பூர் இராணுவக் கல்லூரி, பாசறை பொதுப் பள்ளி, ரங்க்பூர் அரசுக் கல்லூரி மற்றும் ரங்க்பூர் காவல்துறை பள்ளி & கல்லூரி மற்றும் ரங்க்பூர் மாவட்டப் பள்ளிகள் உள்ளது.[5] மேலும் இம்மாவட்டத்தில் 282 உயரநிலைப் பள்ளிகளும், 722 அரசு தொடக்கப் பள்ளிகளும், 38 இளையோர் உயர்நிலைப் பள்ளிகளும், 193 அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகளும், 370 இசுலாமிய சமயம் சார்ந்த மதராசா பள்ளிகளும் உள்ளது.
Remove ads
நாடாளுமன்றத் தொகுதிகள்
வங்காள தேச நாடாளுமன்றத்தின் ரங்க்பூர் ஒன்று முதல் ஆறு வரையான தொகுதிகள் இம்மாவட்டத்தில் உள்ளது.[6]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads