ராசவாடா
ராசவாடா From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராசவாடா (மராத்தி:राजवाडा), இந்தூரில் உள்ள வரலாற்று முக்கியமான இடமாகும். இது மராத்திய மன்னர்களான ஓல்கர்களால் கட்டபட்ட அரண்மனையாகும். இது இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். சத்ரியர்களுக்கு அருகில், ஏழு அடுக்குகளைக் கொண்டு அமைந்துள்ள இக்கட்டிடம் அரசர்களின் செல்வத்தையும், கட்டிடக்கலையின் நுட்பத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.[1]
Remove ads
கட்டிட அமைப்பு
இக்கட்டிடத்தில் இரண்டு பாகமுள்ளது. முதல் பகுதி நகரத்தின் மையத்திலும் இரண்டாம் பகுதி பழைய நகரத்திலும் உள்ளது. ராசவாடா, மராத்திய, மவுலாய வடிவமைப்பை எடுத்துக்காட்டும் விதமாக உள்ளது. தரைத்தளத்திருந்து மூன்று தளங்கள் கற்களிலும் ஏனைய தளங்கள் மரத்தாலும் செய்யப்பட்டுள்ளது.
படக்காட்சியகம்
- ராசவாடா படிமத்தொகுப்பு
- தீபஒளி காலத்தில் ராசவாடா
- அகலியாபாய் சிலை கோட்டை முன்பு
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads