ராஜா ஹரிஸ்சந்திரா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராஜா ஹரிஸ்சந்திரா (Raja Harischandra) என்பது இந்தியாவில் தயாரிக்கப்பட்டு 1913 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஊமைப்படம் ஆகும். பிரபல இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் தாதாசாகெப் பால்கேயின் இயக்கத்திலும் தயாரிப்பிலும் வெளிவந்த இத்திரைப்படம் இந்தியாவில் வெளியிடப்பட்ட முதலாவது முழுநீளத் திரைப்படம் ஆகும்.[1] இந்தியத் தொன்மக் கதைத்தலைவர்களில் ஒருவனான அரிச்சந்திரன் பற்றிய கதையைத் தழுவி இத்திரைப்படம் படமாக்கப்பட்டது. இது 1913 ஆம் ஆண்டு மே 3 ஆம் நாள் வெளிவந்தது.
ஒரேயொரு பிரதி மட்டுமே தயாரிக்கப்பட்டு மும்பை கொரொனேசன் சினிமா மண்டபத்தில் முதன் முதலில் காண்பிக்கப்பட்டது. வணிக ரீதியில் வெற்றி பெற்று, இவ்வகையான மேலும் பல திரைப்படங்களை உருவாக்க இத்திரைப்படம் வழிவகுத்தது.[2]

Remove ads
காட்சியகம்
- ராஜா அரிச்சந்திராவில் அரிச்சந்திரன்.
- திரைப்படக் காட்சி
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads