ராஜ்ஸ்ரீ (இந்தி நடிகை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராஜ்ஸ்ரீ (Rajshree, இந்தி: राजश्री, பிறப்பு: அக்டோபர் 8, 1944) என்பவர் இந்திய பாலிவுட் நடிகை ஆவார். ஜன்வர், பிரம்மச்சாரி போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர்.
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
ராஜ்ஸ்ரீ திரைப்படத் தயாரிப்பாளரும், இயக்குநருமான வி. சாந்தாராம், நடிகை ஜெயசிறி ஆகியோரின் மகளாவார். அமெரிக்காவிற்குப் படப்பிடிப்பு ஒன்றிற்காக சென்றிருந்த போது அங்கு அமெரிக்க மாணவரான கிரெக் சாப்மேன் என்பவரை சந்தித்து காதல் கொண்டார். இவர்கள் மூன்றாண்டுகளின் பின்னர் திருமணம் செய்தனர். அதன் பின்னர் அவர் அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்து[1] கணவருடனும், ஒரு மகளுடனும் லாசு ஏஞ்சலசில் வசித்து வருகிறார்.[2][3] அங்கு அவர் ஒரு ஆடை வணிக நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அதே வேளையில் திரைப்படத் தொழிலிலும் பணியாற்றி வருகிறார். சில படங்களைத் தயாரித்துள்ளார்.
ராஜ்ஸ்ரீ தன் பத்தாவது வயதில் சுபா கா தாரா என்ற திரைப்படத்தில் நடித்தார். தன் தந்தை இயக்கிய கீத் கயா பத்ரோன் நே என்ற படத்தில் ஜிதேந்திராவுடன் இணைந்து நடித்தார் . இவர் சம்மி கபூருடன் இணைந்து நடித்த பிரம்மச்சாரி இருவருக்கும் 1968 இல் விருது வாங்கி தந்தது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads