ராஜ் நாராயணன்
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராஜ் நாராயணன் (Raj Narain, நவம்பர் 1917 - 31 டிசம்பர் 1986) இந்திய இடதுசாரி அரசியல்வாதியும், லோக்பந்து என அழைக்கப்பட்ட இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராக பதவி வகிக்க தகுதியற்றவர் என இவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் வெற்றி பெற்றவர். இதனால் இந்திரா காந்தி 1975-உல் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்க நேரிட்டது.[1] மேலும் நெருக்கடி நிலை காலத்தில் ராஜ் நாராயணன், ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் மது லிமாயியுடன் சிறையில் அடைக்கப்பட்டார்.[2]
1977-இல் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், இந்திரா காந்தியை, உத்தரப் பிரதேசத்தின் ரே பரலி மக்களவைத் தொகுதியில், இந்திரா காந்தியை எதிர்த்து நின்று வெற்றி பெற்றவர்.[3] ஜனதா கட்சியின் மொரார்ஜி தேசாய் தலைமையிலான இந்திய நடுவண் அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றியவர்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads