ராதிகா சாந்தவனம்

தெலுங்கு சிருங்கார காவியம் From Wikipedia, the free encyclopedia

ராதிகா சாந்தவனம்
Remove ads

ராதிகா சாந்தவனம் (Rādhikā-sāntvanam பொருள்; 'ராதிகா சாந்தமானாள்') என்பது தெலுங்கு மொழிக் கவிஞரும் தேவதாசியுமான முத்துப்பழனி (1739-90) அவர்களால் இயற்றப்பட்ட ஒரு கவிதை நூல் ஆகும். இது கிருட்டிணன் துணைவி இராதை மற்றும் புதிய மனைவி இலா ஆகியோருக்கு இடையிலான உறவு மற்றும் இராதையின் பொறாமை சாந்தமாவது பற்றியதாக உள்ளது.

Thumb
கிருஷ்ணனும், இராதையும் மொட்டை மாடியில் அமர்ந்துள்ளனர், புரூக்ளின் அருங்காட்சியகம்

காலம்

துரு பட்டாச்சார்யாவின் கூற்றுப்படி,

இந்த நூலின் துல்லியமான காலம் தெரியவில்லை. ஆனால் முத்துப்பழனி இந்தப் படைப்பை எழுதும் போது குறைந்த பட்சம் ஒரு இளம் பெண்ணாக இருந்திருப்பார். அதாவது 18-24 வயதில் இருந்திருப்பார். மேலும் இது மகாராஜா சிங் அரசவைக்கு தலைமை தாங்கும்போது ( சுமார் 1757-1763) இயற்றப்பட்டது என்று ஊகிக்கலாம். இந்தப் படைப்பு பெரும்பாலும் 1757 மற்றும் 1763 க்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என்று நியாயமாக கருதுலாம். [1]

Remove ads

உள்ளடக்கம்

Thumb
தஞ்சை அரண்மனை

இந்தப் படைப்பு நான்கு பிரிவுகளைக் கொண்டது. அவற்றில் ஐந்நூற்று எண்பத்து நான்கு கவிதைகள் உள்ளன. மேலும் இது ஷ்ரங்கரா-காவ்யா அல்லது ஷ்ரங்கரா-பிரபந்தம் வகையைச் சேர்ந்தது. [2] 'தஞ்சாவூர் சகாப்தத்துடன் தெலுங்கு இலக்கிய வரலாற்றில் தொடர்புடைய ஒரு வகை' முத்துப் பழனியின் இந்தக் கவிதைகள் இராதையின் பார்வையில் பெண்ணுடலின் ஏக்கத்தையும், கண்ணனின் பாலின்ப நுகர்வையும் பாடுவதாக, சிருங்கார ரசத்தைத் தூண்டும் இலக்கியமாக உள்ளது. [3] இது பதினேழாம் நூற்றாண்டின் கவிஞரான சேத்ரய்யாவால் இயற்றப்பட்ட பதங்களால் தாக்கம் பெற்றதாக இருக்கலாம், மேலும் பதினேழாம் நூற்றாண்டில் லிங்கனமகி ஸ்ரீகாமேஸ்வர கவியால் இயற்றபட்ட சத்யபாமா சாந்தவனம் ('சத்யபாமா சந்தமானாள்') இலக்கியத்தின் தாக்கம் பெற்றிருக்கலாம். [4]

இந்த கவிதை இரண்டு பழம்பெரும் ஞானிகளான வியாசரின் மகன் மகரிசி சுகா (அல்லது சுக முனி) மற்றும் மெய்யியலாளரும் மன்னருமான சனகன் ஆகியோருக்கு இடையிலான உரையாடலாக வடிவமைக்கபட்டுள்ளது. [5]

இது கிருட்டிணனின் மனைவி இராதை மற்றும் கிருட்டிணனுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் இலா தேவியின் கதையைச் சொல்கிறது. இலா தேவியின் பருவ வயதையும், கிருட்டிணனுடனான அவளது திருமணத்தின் நிறைவையும் இந்தக் கவிதை விரிவாக சொல்கிறது. இராதை அறியாப் பெண்ணும், இளம் மணமகளான இலதா தேவி கிருட்டிணனின் காதலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது மட்டுமல்லாமல், அவளுக்கு காமக் கலையையும் கற்றுத் தருகிறாள். மேலும் கிருட்டிணனுக்கு தன் இளம் மனைவியை மென்மையாக கையாள்வது குறித்தும் ஆலோசனை கூறுகிறாள். அதேசமயம் கிருட்டிணன் இலாதேவியை திருமணம் செய்துகொண்டதால் இராதைக்கு ஏற்படும் தனிமையும் விரக தாபமும், வலியும் இந்தக் கவிதை படம்பிடித்துக் காட்டுகிறது. ஒரு கட்டத்தில், தான் விரும்பும் கிருட்டிணனைப் பிரிந்த சோகத்தைத் தாங்க முடியாத, இராதை உடைந்து, தன்னைக் கைவிட்டதற்காக கிருட்டிணன் மீது சினம் கொள்கிறாள். கிருட்டிணன் அவளை மெதுவாக சமாதானப்படுத்துகிறான். அவனுடைய அன்பான அரவணைப்பால் அவள் ஆறுதலடைகிறாள். இந்தப் பகுதிதான் கவிதையின் தலைப்புக்கு காரணமாகிறது. [6]

ஒரு பெண் (இராதை) ஒரு ஆணுடன் உடலுறவு கொள்ள முயற்சிப்பதை சித்தரிப்பது தெலுங்கு இலக்கியத்தில் தனித்துவம் வாய்ந்த கவிதையாகும். [7]

Remove ads

வரவேற்பு

அந்தக் காலத்தில் இந்த படைப்பு 'தெலுங்கு இலக்கியத்தின் இரத்தினமாக' கருதப்பட்டது. ஆனால் ஆந்திரப்பிரதேசத்திற்கு அப்பால் பரந்த அளவில் கவனத்தைப் பெறவில்லை. [8] இருப்பினும், இது பின்னர் சர்ச்சைக்கு ஆளானது. ராதிகா-சாந்த்வனம் முதலில் சார்லஸ் பிலிப் பிரவுன் என்பவரால் அச்சுப் பதிப்பிற்காகத் திருத்தப்பட்டது. அவர் தன் சொந்த நாட்டிற்கு திரும்போது வைடிப்பாடி நரசு என்பவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். அவர் இந்தக் காவியத்தை அச்சிட்டு வெளியிட ஆர்வம் கொண்டு 1887 இல் அப்பணியில் முனைந்தார். அவர் இக்காவியத்தில் சிற்றின்பம் குறித்த பல பாடல்கள் இருப்பதால் அவற்றை நீக்கி அச்சிட்டு வெளியிட்டார். 1907 இல் இரண்டாவது பதிப்பு வெளியானது. அதன் பிறகு 1910 ஆம் ஆண்டில் தேவதாசியான பெங்களூர் நாகரத்தினம்மா நூலி்ல் இருந்த பிழைகளை திருத்தி, விடுபட்டிருந்த பகுதிகளையும் சேர்த்து செம்மைப்படுத்தி வெளியிட்டார். 1911 இல் பிரித்தானிய இந்திய அதிகாரிகள் இந்த நூலையும் இதே வெளியீட்டாளரின் எட்டு நூல்களையும் தடை செய்தன்னர். 1947 வரை இந்த தரை உத்தரவு திரும்பப் பெறவில்லை. [9]

பதிப்புகளும் மொழிபெயர்ப்புகளும்

  • முத்துப்பழனி (1910). ராதிகா சாந்தவனம் . பதிப்பாசிரியர், பெங்களூர் நாகரத்தினம்மா. மெட்ராஸ்: வாவில்லா இராமசாமி சாஸ்திருலு அண்ட் சன்ஸ். (மறுபதிப்பு 1952)
  • முத்துபமழனி (1972). ராதிகாசாந்தவனம் . மெட்ராஸ்: இஎம்இஎஸ்கோ புக்ஸ்.
  • முத்துப்பழனி. (2011) Radhika Santwanam—The Appeasement of Radhika. டிரான்ஸ். சந்தியா முல்சந்தனி. புதுடெல்லி: பெங்குயின்.
  • முத்துப்பழனி. (2023) ராதிகா சாந்தமானாள். தமிழ் மொழிபெயர்ப்பு; பி. எம். சுந்தரம் அகநி பதிப்பகம், சென்னை[10]
Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads