ராதிகா சிற்சபையீசன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராதிகா சிற்சபையீசன் (Rathika Sitsabaiesan, பிறப்பு: 23 திசம்பர் 1981[1]) கனடாவின் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். கனடா நாடாளுமன்றத்திற்குத் தெரிவான முதலாவது தமிழர் இவராவார்.
இவர் 2011, மே 2 இல் நடந்த தேர்தலில் ஸ்கார்பரோ-ரூச் ரிவர் என்ற தொகுதியில் புதிய சனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[3] 2015 தேர்தலில் இவர் மீண்டும் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
Remove ads
வாழ்க்கைச் சுருக்கம்
இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்த[2] ராதிகா 5வது அகவையில் கனடாவுக்குக் குடி பெயர்ந்தார். டொராண்டோ பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் பட்டப் படிப்பை மேற்கொண்டு, பின்னர் கார்ல்ட்டன் பல்கலைக்கழகத்தில் தொடந்து கல்வி கற்று வர்த்தகவியலில் இளமாணிப் பட்டம் பெற்றார். தொடர்ந்து குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார்[4].
தமிழ் கல்வி
ஐந்து அகவையில் கனடா வந்த ராதிகா இங்கு வழங்கப்படும் தமிழ் வகுப்புகளுக்குச் சென்றார். இவர் பேருந்து எடுத்துச் சென்று ஆர்வத்துடன் தமிழ் கற்றார். இவரது தந்தையார் கத்தோலிக்க கல்வித் திணைக்களத்துடன் இணைந்து மிசசாகாவில் முதலில் தமிழ் வகுப்புக்களைத் தொடங்கினார்.[5] இவர் ரொறொன்ரோ பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் தலைவராகவும் செயற்பட்டார்.
Remove ads
அரசியலில்
இராதிகா புதிய சனநாயகக் கட்சியில் 2004 ஆம் ஆண்டில் இணைந்தார். எட் புரோட்பெண்ட்டுக்கு ஆதர்வாக அவர் பரப்புரை செய்தார். அன்றிலிருந்து அக்கட்சியின் பல செயற்பாடுகளில் தீவிரமாகப் பங்குபற்றி வருகிறார்[6]. பதவி ஏற்பு விழா உரை.[7]
ரொரோண்டோ பெரும்பாகத்தில் இடம்பெற்ற நடுவண் அரசுத் தேர்தலில் ஸ்கார்பரோ ரூச் ரிவர் தொகுதியில் முதற்தடவையாக புதிய சனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 18,856 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். 2008 இல் இடம்பெற்ற தேர்தலில் இக்கட்சி 4,900 வாக்குக்களை மாத்திரமே பெற்றிருந்தது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads