ராபிலேசியா வனக் காப்பகம்
தம்புனான் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு வனக்காப்பகம் ஆகும். From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராபிலேசியா வனக் காப்பகம் (மலாய்: Hutan Simpan Rafflesia; ஆங்கிலம்: Rafflesia Forest Reserve) என்பது மலேசியா, சபா மாநிலம், உட்பகுதி பிரிவு, தம்புனான் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு வனக்காப்பகம் ஆகும்.
1984-ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் ஏராளமாகக் காணப்படும் ராபிலேசியா (Rafflesia pricei) மலர்களைப் பாதுகாக்க, இந்த வனப் பாதுகாப்பகம் சபா வனத் துறையால் (Sabah Forestry Department) நிறுவப்பட்டது.
Remove ads
பொது
இந்த வனக் காப்பகத்தைப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (International Union for Conservation of Nature - IUCN), ஒரு பாதுகாப்பு காப்பகமாக அறிவித்து உள்ளது. இந்த வனக் காப்பகத்தின்பரப்பளவில் 356 ஹெக்டர்.
தம்புனான் நகரத்தின் புறநகர்ப் பகுதியில் இந்த வனக் காப்பகம் உள்ளது. உலகின் மிகப்பெரிய மலரான ராபிலேசியா மலர்களுக்காக இந்த வனக் காப்பகம் உருவாக்கப்பட்டு உள்ளது.[1] [2]
காட்சியகம்
- ராபிலேசியா மலர் 1
- ராபிலேசியா மலர் 2
- இந்தோனேசியா ராபிலேசியா மலர் அஞ்சல்தலை
- ராபிலேசியா மலர் 3
ராபிலேசியா தகவல் மையம்
கோத்தா கினபாலுவில் இருந்து தம்புனான் செல்லும் சாலையில் ராபிலேசியா தகவல் மையம் (Rafflesia Information Centre) எனும் பெயரில் ஒரு தகவல் அலுவலகத்தை அமைத்து உள்ளார்கள்.
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads