ராப் ஃபோர்ட்

கனேடிய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

ராப் ஃபோர்ட்
Remove ads

ராபர்ட் புரூஸ் "ராப்" ஃபோர்ட் (Robert Bruce "Rob" Ford, பி. மே 28, 1969) ஒரு கனேடிய அரசியல்வாதியும் வணிகரும் ஆவார். தற்போது டொராண்டோ நகரின் மேயர் பதவியில் இருக்கிறார். டொராண்டோவின் 64ஆம் மேயரான ஃபோர்ட், டிசம்பர் 1, 2010 பதவிக்கு வந்தார். அரசு செலவிடுதல், வரிகளை குறைக்கவேண்டும் என்று பரப்புரை செய்து 2010 மேயர் தேர்தலை வென்றுள்ளார். இதற்கு முன்பு, டொராண்டோ மாநகரவைக்கு 2000இலிருந்து 2010 வரை மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]

விரைவான உண்மைகள் ராப் ஃபோர்ட்Rob Ford, டொராண்டோவின் 64ஆம் மேயர் ...

2013இல் ராப் ஃபோர்ட் போதைப்பொருட்களை பயன்படுத்துவதை காட்டுகிற வீடியோகளை டொராண்டோ காவல்துறை கண்டுபிடித்துள்ளது. இந்த வீடியோகளில் ஃபோர்ட் போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் சந்தித்து, கோக்கைனை பயன்படுத்தி, மது குடித்து தெரிகிறார். ஒரு வீடியோவில் அவரது எதிரிகளை கொலை செய்வார் என்று மிரட்டுகிறார். சட்டங்களின் படி டொராண்டோ மாநகரவையால் மேயரை பதவி அகற்றி வைக்க அதிகாரம் இல்லை, ஆனால் நவம்பர் 2013இல் சில அதிகாரங்களை ஃபோர்டிலிருந்து துணை மேயருக்கு மாற்றியுள்ளது. அக்டோபர் 2014 வரை ஃபோர்ட் பதவியில் இருப்பார். 2014 டொராண்டோ மேயர் தேர்தலில் ஃபோர்ட் போட்டியிடுவார் என்று தெரிவித்துள்ளார்.

இவரது அண்ணன் டக் ஃபோர்ட் டொராண்டோ மாநகரவையில் பணி புரிகிறார்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads