ராமச்சந்திர பாபு
இந்திய ஒளிப்பதிவாளர், திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராமச்சந்திர பாபு, கேரள மாநில விருதுபெற்ற திரைப்பட ஒளிப்பதிவாளர். இவர் அதிகமாக மலையாளத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருந்தாலும் தமிழ், இந்தி, அரபி, ஆங்கில மொழித் திரைப்படங்களிலும் பங்காற்றியுள்ளார்.
Remove ads
இளம்பருவம்
ராமச்சந்திர பாபு தமிழ்நாட்டின் செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகத்தில் பிறந்தவர். சென்னையின் லயோலா கல்லூரியில் வேதியியல் படித்து இளநிலை பட்டம் பெற்றார். பின்னர் புனேயில் உள்ள இந்தியத் திரைத்துறை நிறுவனத்தில் சேர்ந்து திரைத்துறையில் இளநிலை பட்டம் பெற்றார்.
திரைத்துறை
வித்யார்த்திகளிலே இதே இதே என்னும் திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராகத் திரைத்துறைக்கு அறிமுகமானார். இவரது முதல் வண்ணப்படமான த்வீப் இவருக்கு கேரள மாநில விருதைப் பெற்றுத் தந்தது. ரதிநிர்வேதம், சாமரம், ஒரு வடக்கன் வீரகதா ஆகிய திரைப்படங்களுக்கும் மாநில விருது பெற்றார். பகல் நிலவு உட்பட சில தமிழ்த் திரைப்படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இவர் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய திரைப்படங்களில் சில:
- வித்யார்த்திகளிலே இதே இதே -மலையாளம்
- ரேகிங் -மலையாளம்
- மனசு -மலையாளம்
- நிர்மால்யம் -மலையாளம்
- அக்னிபுஷ்பம் -மலையாளம்
- சிரிஷ்டி -மலையாளம்
- ஸ்வப்னதனம் -மலையாளம்
- அம்மே அனுபமே -மலையாளம்
- வீடு ஒரு சொர்க்கம் -மலையாளம்
- சினேகா யமுனா -மலையாளம்
- அக்ரகாரத்தில் கழுதை -தமிழ்
- ஓணப்புடவா -மலையாளம்
- உதயம் கிழக்குதானே -மலையாளம்
- அலாவுதீனும் அற்புதவிளக்கும் -தமிழ்
- ஒரே வானம் ஒரே பூமி -தமிழ்
Remove ads
படத்தொகுப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads