இலயோலாக் கல்லூரி, சென்னை
சென்னைப் பல்கலைக் கழகத்தின் இணைவுப் பெற்றறக்கல்லூரிகளுள் ஒன்று From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலயோலாக் கல்லூரி (Loyola College, Chennai) சென்னையில் இயேசு சபையினரால் நடத்தப்படும் ஓர் உயர்கல்வி நிறுவனமாகும். இது இந்தியாவின் மதிப்புமிக்க உயர்நிலை கல்விக்கூடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இக்கல்லூரியில் கலை, அறிவியல், வணிகம் ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்புக்கள் படிக்கலாம். சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட தன்னாட்சி கல்வி நிறுவனமாக 1978ஆம் ஆண்டு நிலை உயர்த்தப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டுக் கணக்குப் படி, இக்கல்லூரியில் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
Remove ads
வரலாறு

1925ஆம் ஆண்டு, பிரெஞ்ச் ஜெசுட் அருட்தந்தை பிரான்சிஸ் பெட்ரம் இலயோலா கல்லூரியைத் தொடங்கினார். இந்த முயற்சியில் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம், கேம்பிரிச் பல்கலைக்கழகம், இலண்டன் பொருளாதாரப் பள்ளி ஆகியவற்றில் கல்வி கற்ற கிறித்துவின் குமுகாயத்தினர் சிலர் இவருக்குத் துணையாக இருந்தனர்.
சில குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்
அரசுச் சேவைகள்
- உ. சகாயம், இந்திய ஆட்சிப் பணி அதிகாரி [IAS]
அரசியலில்
- இராமசாமி வெங்கட்ராமன், முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர்
- சி. ரங்கராஜன், முன்னாள் ஆளுனர், பாரத ரிசர்வ் வங்கி
- ப. சிதம்பரம், முன்னாள் உள்துறை அமைச்சர்
- தயாநிதி மாறன், முன்னாள் ாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் (துணித்துறை), இந்திய அரசு
வணிகத்தில்
- வர்கீஸ் குரியன், இந்தியாவின் வெண்புரட்சியின் வடிவமைப்பாளர்.
- சி. கே. பிரகலாத், மேலாண்மை ஆசிரியர்
- கலாநிதி மாறன், சன் தொலைக்காட்சி நெட்வொர்க்ஸ்
விளையாட்டில்
- விசுவநாதன் ஆனந்த், உலக சதுரங்க சாதனையாளர்
- விஜய் அமிர்தராஜ், டென்னிஸ் வீரர்
- இராமநாதன் கிருஷ்ணன், டென்னிஸ் வீரர்
- ரமேஷ் கிருஷ்ணன், டென்னிஸ் வீரர்
- சரத் கமல், இந்திய மேசைப்பந்தாட்ட வீரர்
சமயம்
- டி. சைமன் லூர்துசாமி, உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கர்தினால்
இதழியலில்
- நரசிம்மன் ராம், இதழியலாளர், த இந்து நாளிதழின் முதன்மை ஆசிரியர்
- பி. சாய்நாத்,த இந்து நாளிதழின் ஊரகச் செய்தி ஆசிரியர் மற்றும் மக்சேசே பரிசு பெற்றவர்.
நாடகம் மற்றும் திரைக்கலைஞர்கள்
- அரவிந்த சாமி, நடிகர்
- சூர்யா சிவகுமார், நடிகர்
- விக்ரம், நடிகர்
- யுவன் சங்கர் ராஜா, திரை இசையமைப்பாளர்
- கே. வி. ஆனந்த், ஒளிப்பதிவாளர்
- கார்த்திக் ராஜா, திரை இசையமைப்பாளர்
- எஸ். ஜே. சூர்யா, திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர்
- மகேஷ் பாபு, நடிகர்
- ஜெயம் ரவி, நடிகர்
- விஷால் ரெட்டி, நடிகர்
- விஷ்ணுவர்த்தன், இயக்குநர்
- பலோமா ராவ், நடிகை
- விஜய் வசந்த், நடிகர்
- சிபிராஜ், நடிகர்
- டி.இமான், திரை இசையமைப்பாளர்
- பிரபு, நடிகர்
- விஜய் ஆண்டனி, திரை இசையமைப்பாளர்
Remove ads
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads