ராம் சுந்தர் தாசு

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

ராம் சுந்தர் தாசு (Ram Sundar Das) (Hindi: राम सुन्दर दास; 9 சனவரி 1921 – 6 மார்ச் 2015) ஓர் இந்திய அரசியல்வாதியும் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஆவார். இவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்களுள் ஒருவரும் ஆவார்[1]

விரைவான உண்மைகள் ராம் சுந்தர் தாசு, 15 ஆவது முதலமைச்சர் பீகார் முதலமைச்சர்களின் பட்டியல் ...

இவர் பீகார் மாநிலத்தில் 1979 ஆம் ஆண்டு ஏப்வரல் 21 ஆம் நாள் முதல் 1980 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் நாள் வரை முதலமைச்சராக இருந்தார். 1991 ஆம் ஆண்டு பத்தாவது மக்களவைக்கு, பீகார் மாநிலத்தின் ஹாஜீபூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே தொகுதியிலிருந்து 2009 ஆம் ஆண்டிலிருந்து பதினைந்தாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஹாஜீபூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், இம்முறை இராம் விலாசு பாசுவான் நரேந்திர மோடி - பாரதீய ஜனதா கட்சியின் அலையின் காரணமாக வெற்றி பெற்றார்.

இவர் பீகார் முதலமைச்சராக இருந்த போது ஜனதா கட்சியின் தலைவர்களான சந்திரசேகர் போன்றோரின் ஆதரவையும் அந்நாளைய பீகார் ஜனதா கட்சி தலைவரான சத்யேந்திர நாராயண் சின்கா ஆதரவையும் பெற்றவராக இருந்தார்.[2] 2015 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் நாள் தனது 94 ஆம் வயதில் இறந்தார்.[1]

Remove ads

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads