ராம் பரன் யாதவ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மருத்துவர் ராம் பரன் யாதவ் (Dr. Ram Baran Yadav; நேபாள மொழி: रामवरण यादव) (பதவிக் காலம்: 2008–2015) நேபாளத்தின் முதலாவதும் தற்போதைய அதிபரும் ஆவார். இவர் நேப்பாளி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஆவார்[1]. ஜுலை 21, 2008 இல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் யாதவ் சட்டசபையின் 590 உறுப்பினர்களில் 308 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றார்[2].
2008 இல் இடம்பெற்ற சட்டசபைக்கான தேர்தல்களில் யாதவ் தனுசா மாவட்டத்தில் போட்டியிட்டு 10,932 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்[3]. 1999 இல் சுகாதார அமைச்சராகப் பணியாற்றியிருந்தார்[4][5]. இவர் ஒரு மருத்துவப் பட்டதாரி ஆவார்.
Remove ads
வெளிநாட்டுப் பயணம்

யாதவ், 2010இல் இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கும் சண்டிகருக்கும் சென்றார். சண்டிகரில் தான் படித்த முதுநிலை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார்.[6] மார்ச் 26, 2015 அன்று, சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணமாகச் சென்றார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads