ராய்கட் கோட்டை

From Wikipedia, the free encyclopedia

ராய்கட் கோட்டை
Remove ads

ராய்கட் கோட்டை (Raigad fort) மகாராட்டிரா மாநிலத்தின் ராய்கட் மாவட்டத்தில், மகத் எனும் நகரத்தின் அருகே அமைந்த மலையில் முதலில் ஹிரோஜி இந்தல்கர் (தேஷ்முக்) என்பவரால் 1030ல் கட்டப்பட்ட கோட்டையாகும். 1674ல் இக்கோட்டை மராத்தியப் பேரரசின் தலைநகராக விளங்கியது.[1][2]

விரைவான உண்மைகள் ராய்கட் கோட்டை, ஆள்கூறுகள் ...

இக்கோட்டை கடல் மட்டத்திலிருந்து 820 மீட்டர் உயரத்தில் அமைந்த இக்கோட்டை மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சகாயத்திரி மலையில் அமைந்துள்ளது. ராய்காட் கோட்டைக்குச் செல்ல 1737 படிகள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோட்டையை 1818ல் பேஷ்வாக்களிடமிருந்து கிழக்கிந்திய கம்பெனிப் படைகள் கைப்பற்றி சீரழித்தது.

Remove ads

வரலாறு

Thumb
ராய்கட் கோட்டையில் பேரரசர் சிவாஜியின் சிலை

சிவாஜி, ராய்கட் கோட்டையை பிஜப்பூர் சுல்தானின் படைத்தலைவர் சந்திரராவ் மோர் என்பவரிடமிருந்து 1656ல் கைப்பற்றி, கோட்டையை புதுப்பித்து, மராத்தியப் பேரரசின் தலைநகராக மாற்றிக் கொண்டார்.

ராய்காட் கோட்டையின் அடியில் ராய்காவாடி மற்றும் பச்சத் போன்ற முக்கிய கிராமங்களில் 10,000 மராத்திய குதிரைப்படைகள் காவல் பணியில் இருந்தது.

1689ல் சூபில்கர் கானால் கைப்பற்றப்பட்ட இக்கோட்டைக்கு அவுரங்கசீப் இஸ்லாம்காட் எனப் பெயரிட்டார். 1707ல் சித்திக் பதேகான் என்பவர் இக்கோட்டை தனது கட்டுப்பாட்டில் 1733 வரை வைத்திருந்தார்.[3]1818ல் கிழக்கிந்திய கம்பெனியின் படைகள், மராத்திய பேஷ்வாக்களிடமிருந்து ராய்கட் கோட்டையைக் கைப்பற்றி அழித்தனர்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads