ராய்காஞ்ச் பறவைகள் சரணாலயம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராய்காஞ்ச் பறவைகள் சரணாலயம் (Raiganj Wildlife Sanctuary) குலிக் பறவைகள் சரணாலயம் எனும் பெயரால் பரவலாக அறியப்படுகிறது. இது இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உத்தர தினஜ்பூர் மாவட்டத்தில் ராய்காஞ்ச் எனும் இடத்தில் அமைந்துள்ளது. ஆசியாவின் இரண்டாவது பெரிய சரணாலயாக இது அறியப்படுகிறது.[1] இச்சரணாலயத்தில் 164 வகையான பறவைகள் உள்ளன.[2][3] மேலும் 70,000 முதல் 80,000 பறவைகள் புலம் பெயர்ந்து வருடந்தோறும் இங்கு வந்து செல்கின்றன.[4] இச்சரணாலயம் 1985 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இப்பறவைகள் சரணாலயம் 1.3 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது.
Remove ads
அமைவிடம்
இந்தப் பறவைகள் சரணாலயம் ராய்காஞ்ச் நகரிலிருந்து 4 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. ராய்காஞ்ச் நகரானது கொல்கத்தாவிலிருந்து 425 கிலோமீட்டர்கள் தொலைவிலும், சிலிகுரி நகரிலிருந்து 181 கிலோமீட்டர்கள் தொலைவிலும் அமைந்துள்ளது. [5]
காலநிலை
இச்சரணாலயத்தின் வெப்பநிலை கோடைக்காலத்தில் 38° முதல் 21° வரையிலும், குளிர்காலத்தில் 23° முதல் 6° வரையிலும் இருக்கும்.[5] வருடாந்திர சராசரி மழையளவு (ஜூலை முதல் செப்டம்பர் வரை) 1,550 மில்லிமீட்டர்கள் ஆகும்.[5]
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads