ராவ் இந்தர்ஜித் சிங்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராவ் இந்தர்ஜித் சிங் (Rao Inderjit Singh, பிறப்பு: 11 பிப்ரவரி 1950) ஓர் இந்திய அரசியல்வாதியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சராகவும், வெளியுறவுத் துறை அமைச்சராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2009 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்பக் குழுவின் தலைவராக இருந்து வருகிறார்.[1][2] இவர் 30 மே 2019 முதல் திட்டமிடுதல் மற்றும் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக உள்ளார்.
Remove ads
இளமைக் காலம்
இவர் அரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான ராவ் பைரேந்திர சிங்கின் மகனாவார். இவர் தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றார். இவர் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரரான ராஜா ராவ் துலா ராம் என்பவரின் சந்ததியினர் ஆவார்.[3]
அரசியல் வாழ்க்கை
அரியானா சட்டமன்றம்
இவர் 1977 ஆம் ஆண்டு முதல் நான்குமுறை அரியானா சட்டமன்றத்திலிருந்து, சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1982 முதல் 1987 வரை அவர் உணவு மற்றும் நுகர்பொருள் விநியோகத்திற்கான மாநில அமைச்சராக இருந்தார்.[4] பின்னர் 1998-1999, 2000-2004 மற்றும் 2004-2009 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1991 முதல் 1996 வரை சுற்றுச்சூழல், வனத்துறை, மருத்துவ மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சராகவும், 2004 முதல் 2006 வரை வெளியுறவுத் துறை அமைச்சராகவும் மற்றும் 2006 முதல் 2009 வரை பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
வெற்றிபெற்ற தேர்தல்கள்
இணை அமைச்சர்
இவர் மே 2019 ஆம் ஆண்டு முதல் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை இணை அமைச்சராகப் (தனி பொறுப்பு) பதவி வகிக்கின்றார்.[7]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads