ரிச்சாட் கிறிஸ்தோபர் ஹரிங்டன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரிச்சாட் கிறிஸ்தோபர் ஹரிங்டன் (Richard Christopher Carrington) என்பவர் ஓர் ஆங்கிலேய அமெச்சூர் வானியலாளர் ஆவார். 1859 ஆம் ஆண்டில் சூரிய நடுக்கம் தொடர்பாக வானியல் அவதானிப்புகளில் இவர் ஈடுபட்டார். இச்சூரிய நடுக்கத்தினால் பூமிக்கும் அதிலுள்ள சோதிக்கும் ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் மற்றும் பாதிப்புகள் பற்றிய கருத்துக்களை இவர் வெளியிட்டதுடன்.1863 ஆம் ஆண்டில் சூரியனின் வேறுபட்ட சுழற்சியினையும் பல்வேறு சூரியப்புள்ளிகளையும் இவர் அவதானித்தார். அத்துடன் இவர் அரச வானியல் சமூகத்தின் தங்கப் பதக்க விருதினையும் லலன்டே பரிசினையும் பெற்றுள்ளார். 1826 ஆம் ஆண்டில் மே மாதம் 26 ஆம் திகதி இங்கிலாந்தின் லண்டனில் உள்ள செல்சீ எனும் இடத்தில் பிறந்த இவர் 1875 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தனது 49 ஆம் வயதில் இறந்தார்.[1][2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads