ரியாத்
சவுதி அரேபியாவின் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரியாத் (அரபு மொழி: الرياض) சவுதி அரேபியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அரபிய மூவலந்தீவின் நடுவில் அமைந்த ரியாத் சவுதி அரேபியாவின் ரியாத் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பகுதிகளான நாசித், அல் யமாமா என்பவற்றுள் அடங்கியது. இந்நகரத்தில் 4.26 மில்லியன் பேர் வசிக்கிறார்கள்.[1]
15 மாநகரப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள ரியாத் நகரம் நகரபிதாவைத் தலைவராகக் கொண்ட மாநகரசபையாலும், மாகாணத்தின் ஆளுனரைத் தலைவராகக் கொண்ட ரியாத் வளர்ச்சி அதிகாரசபையாலும் நிர்வாகம் செய்யப்படுகிறது. ரியாத் உலக நகராக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Remove ads
வரலாறு
தொடக்க வரலாறு
இசுலாத்துக்கு முற்பட்ட காலத்தில் ரியாத் அமைந்துள்ள இடத்தில் அமைந்திருந்த நகரம் ஹஜிர் என அழைக்கப்பட்டது. பனி அனீபா என்னும் பழங்குடியைச் சார்ந்தோர் இந்த நகரை அமைத்ததாகத் தெரிகிறது.[2] இது அல் யமாமா மாகாணத்தின் தலைநகரமாக இருந்தது. இந்த மாகாணத்தின் ஆளுனர்கள் உமய்யாத், அப்பாசியக் காலங்களில் நடு அரேபியாவினதும், கிழக்கு அரேபியாவினது பெரும் பகுதிக்குப் பொறுப்பாக இருந்தனர். கிபி 866 இல், அல் யமாமா அப்பாசியப் பேரரசிலிருந்து பிரிந்து, உகாதிரைட்டுக்களின் ஆட்சிக்குள் வந்தது. இவர்கள் தலைநகரை ஹஜிரில் இருந்து அருகில் இருந்த அல் காரிச்சுக்கு மாற்றினர். இதனால் ஹஜிர் நகரம் ஒரு நீண்டகால வீழ்ச்சி நிலைக்குச் சென்றது. 14 ஆம் நூற்றாண்டில் வட ஆப்புரிக்கப் பயணி இப்னு பத்தூதா தான் ஹஜிர் நகருக்குச் சென்றது பற்றி எழுதியுள்ளார். அவர் இந்நகரை அல் யமாமாவின் முதன்மை நகரம் எனக் குறித்துள்ளார். ஹஜிர் கால்வாய்களையும், மரங்களையும் கொண்ட நகரமாக இருந்ததாகவும் நகரில் பெரும்பான்மையோர் பனி அனீபாக்கள் என்றும் அவர்களது தலைவருடன் தான் மக்காவுக்கு ஹஜ் கடமைகளை நிறைவேற்றச் சென்றதாகவும் இப்னு பத்தூதா குறிப்பிட்டுள்ளார்.
பிற்காலத்தில், ஹஜிர் பல தனித்தனியான குடியிருப்புக்களாகப் பிரிந்தது. இவற்றுள் குறிப்பிடத்தக்கவை மிக்ரின், மிக்கால் என்பவை. எனினும், ஹஜிர் என்னும் பெயர் தொடர்ந்தும் நாட்டுப்புறக் கவிதைகளில் இடம்பெற்று வந்தது. இவ்விடத்துக்கு ரியாத் என்னும் பெயர் பயன்பட்ட மிகப் பழைய குறிப்பு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அக்காலத்து வரலாற்றுப் பதிவாளர் ஒருவர்1590 இல் நிகழ்ந்த ஒரு நிகழ்வை அறிவிக்கும்போது இப்பெயரைக் குறிப்பிட்டுள்ளார். 1737 இல், அயலிலி இருந்த மன்பூகா என்னும் இடத்திலிருந்து அகதியாக வந்த தெகாம் இப்னு தவ்வாசு என்பவன் ரியாத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.[3] அவன் ரியாத் நகரின் பல்வேறு பகுதிகளைச் சுற்றி ஒரே மதிலைக் கட்டி அதை ஒரே நகரமாக்கினான்.
சவூதி அரசு
1744 இல் முகம்மத் இப்னு அப்தெல் வஹாப் அயலில் இருந்த திரியா நகர ஆட்சியாளரான முகம்மத் இப்னு சவூத் என்பவனுடன் கூட்டணி அமைத்தான். இப்னு சவூத், சுற்றியிருந்த பகுதிகளை ஒரு இசுலாமிய ஆட்சியின் கீழ் கொண்டுவரும் நோக்கத்துடன் அவற்றைக் கைப்பற்றத் தொடங்கினான். அல் கார்ஜ், அல் அசா ஆகியவற்றைச் சேர்ந்த படைகளுடனும், நஜ்ரானைச் சேர்ந்த பனு யாம் இனக்குழுவுடனும் இணைந்து இப்னு தவ்வாசு பலத்த எதிர்ப்பைக் காட்டினான். இறுதியில் இப்னு தவ்வாசு தப்பியோடினான். நீண்ட காலப் போரை முடிவுக்குக் கொண்டுவந்து 1774 இல் ரியாத் சவூதிகளிடம் சரணடைந்தது. இது ரியாத்தைத் தலைநகராகக் கொண்ட முதல் சவூதி அரசை நிறுவ வழியேற்படுத்தியது.[3]
ஓட்டோமான் பேரரசுக்காகச் செயற்பட்ட எகிப்தின் முகம்மத் அலி அனுப்பிய படைகள் முதல் சவூதி அரசை அழித்தன. 1818 இல், ஓட்டோமான் படைகள் சவூதியின் தலைநகர் திரியாவைத் தரைமட்டமாக்கின.[3] இவர்களது படைமுகாம் ஒன்று நாஜித்தில் இருந்தது. சவூதி வம்சத்தினரின் குறுகியகால வீழ்ச்சியை இது குறித்தது.[4]
துர்க்கி பின் அப்துல்ல பின் முகம்மத் இரண்டாம் சவூதி அரசின் முதல் அமீர் ஆனான். இவன் சவூத் பின் சவூதின் ஒன்றுவிட்ட சகோதரன். 1834 வரை 19 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தான். இவர்கள் எகிப்தில் இருந்த ஓட்டோமான் பேரரசின் ஆட்சிப் பிரதிநிதியான முகம்மத் அலியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், இக்காலப்பகுதி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads