இடபாரூட மூர்த்தி

From Wikipedia, the free encyclopedia

இடபாரூட மூர்த்தி
Remove ads
சிவ வடிவங்களில் ஒன்றான
இடபாரூட மூர்த்தி
Thumb
இடபாரூட மூர்த்தி
மூர்த்த வகை:மகேசுவர மூர்த்தம்,
உருவத்திருமேனி
விளக்கம்:காளையை வாகனமாக
கொண்டவர்
இடம்:கைலாயம்
வாகனம்:நந்தி தேவர்

ரிஷபாரூடர், அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகவும்.இடபாரூடரை அபிசேகம் செய்ய உடல் நோய் தீரும், குழந்தை பாக்கியம் உண்டாகும், திருமந்திர பொருள் விளங்கும். அருகம்புல் அர்ச்சனையும், தாம்பூல நைவேத்தியமும் பிரதோஷ காலங்களில் கொடுக்க நினைத்தது நடைபெறும். உயர்பதவி கிட்டும். இங்குள்ள சிவனை வில்வ நீரால் அபிசேகம் செய்ய அடுத்த பிறவியிலும் சிவனின் அருள் பரிபூரணமாய் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சொல்லிலக்கணம்

ரிஷபம் என்றால் காளை, காளையுடன் இருக்கும் சிவனின் உருவத்திருமேனி ரிஷபாரூடர் என்று வழங்கப்படுகிறது.

வேறு பெயர்கள்

  • ஏறமர் கடவுள்
  • விடையேறிய விமலர்
  • விடையேறுவர்
  • விருஷப வாகனன் - சமஸ்கிருதம்
  • பெற்றம் ஊர்ந்தவர்

தோற்றம்

காளையின் மீது நான்கு கரங்களுடன் சிவபெருமான் காட்சிதருகிறார். உடன் உமையம்மையும் இடதுபுறம் வீற்றிருக்கிறார்.

உருவக் காரணம்

அசுரர்கள் தொல்லையினால் தேவர்கள் கயிலாயம் சென்று தங்களை காப்பாற்ற சிவனிடம் முறையிட்டனர். சிவன் தேவர்களால் செய்யப்பட்ட தேரில் ஏறி அசுரர்களுடன் போருக்கு புறப்பட்டார். தேரின் அச்சு முறிந்து விட்டது. சிவனிடம் கொண்ட அன்பின் காரணமாக மகாவிஷ்ணு காளை உருவம் கொண்டு சிவனை ஏற்றிச் சென்றார். [1]

கோயில்கள்

விராதனூர், மதுரை அருகே, தமிழ்நாடு திருவாவடுதுறை, தமிழ்நாடு

மேலும் காண்க

மேற்கோள்கள்

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads