ருக்மணி தேவி (நடிகை)
இலங்கைத் திரைப்பட நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
ருக்மணி தேவி (Rukmani Devi, சிங்களம்: රුක්මණී දේවී, சனவரி 15, 1923 - அக்டோபர் 28, 1978) ஓர் இலங்கைத் திரைப்பட நடிகையாவார். ஆடல், பாடல், நடிப்பு எனப் பல்துறை ஆளுமையின் காரணமாக வெள்ளித்திரையின் நாயகி எனப் போற்றப்பட்டவர். இவர் பல சிங்கள, தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
ஜோன். டி. டானியல், ஹெலன்ரோஸ் தம்பதியருக்கு இரண்டாவது மகளாக நுவரெலியாவில் பிறந்தார். இவரின் இயற்பெயர் டெய்சி இராசம்மா. தந்தையார் கொழும்புச் செட்டி சமுகத்தை சேர்ந்தவர். டெய்சி தனது ஆரம்பப் படிப்பை கொழும்பு புனித மத்தியூ பாடசாலையிலும், பின்னர் வெள்ளவத்தை புனித கிளேயர் பாடசாலையிலும் பயின்றார்.
நடிப்புலகில்
தனது 13 வது வயதிலே பள்ளி மேடை நாடங்களில் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கினார். இதன் மூலம் இசைத் தொகுப்பிற்குப் பாடும் வாய்ப்பையும், சினிமாவில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். 1947 ல் வெளிவந்த முதல் சிங்கள திரைப்படமான கடவுன பொறந்துவவில் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கி 84 திரைப்படங்கள் வரை நடித்துள்ளார். இவற்றில் சில தமிழ் திரைப்படங்களும் அடங்கும். நான் உங்கள் தோழன் படத்தில் வி. பி. கணேசனுக்குத் தாயாகவும், காத்திருப்பேன் உனக்காக படத்தில் கதாநாயகி கீதாஞ்சலிக்குத் தாயாகவும் இவர் நடித்துள்ளார்.
மினர்வா தியேட்டர் குரூப்பில் பணி புரியும் போது பி. ஏ. டபிள்யூ. ஜெயமன்னா எனும் திரைப்படத் தயாரிப்பாளரை காதலித்தார் .இவர்கள் திருமணம் வலிங்கம்பட்டிய மாதாகோவிலில் 1943 பெப்ரவரி 18 இல் நடைபெற்றது
Remove ads
மறைவு
1978 ம் ஆண்டு அக்டோபர் 28 இல் துடெல்ல என்னுமிடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மரணமடைந்தார். சிங்கள படமான "அஹசின் போலவாடா " வில் பாடியதே அவரது கடைசி பாடலாகும் .இந்த திரைப்படம் 1978 இல் நடைபெற்ற உலக கெய்ரோ பிலிம் விழாவில் அக்னெட் பரிசை(Agnet Award ) பெற்றது .ஸ்ரீ லங்காவின் ப்ரெசிடெண்ட் பரிசளிப்பு விழாவிலும் இப்படம் வாகை சூடியது . இதில் இவர் பாடிய "தொய் தொய்யா புத்த தொய் தொய் " பாடலுக்கு பரிசு அறிவிக்கப்பட்டது . ஆனால் இப்பரிசை பெற அவர் அப்போது உயிருடன் இல்லை . அவரது கணவர் எட்டி ஜெயமண்ணா விடம் அப்பரிசு கையளிக்கப் பட்டது இவர் உருவம் பொறிக்கப்பட்ட தபால் தலை இலங்கை அரசினால் வெளியிடப்பட்டுள்ளது. நீர்கொழும்பில் இவர் வாழ்ந்த வீடு தற்போது அருங்காட்சியகமாகப் பராமரிக்கப்படுகிறது.
நடித்த திரைப்படங்கள் சில
வெளி இணைப்புகள்
- ருக்மணி தேவியின் பாடல்கள் பரணிடப்பட்டது 2006-06-14 at the வந்தவழி இயந்திரம்
- 'The Nightingale of Sri Lanka' : Rukmani Devi பரணிடப்பட்டது 2006-05-12 at the வந்தவழி இயந்திரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads