ருவாரி மலிதம்மா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ருவாரி மலிதம்மா 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற சிற்பியும் கட்டிடக்கலைஞரும் ஆவார். இந்தியாவின், இன்றைய [[கர்நாடக மாநிலம்|கர்நாடக மாநிலப்] பகுதிகளில் அக்காலத்தில் நிலவிய போசளப் பேரரசால் கட்டப்பட்ட பல கோயில்களில் இவர் முக்கிய பங்களிப்புக்களைச் செய்துள்ளார். இவருடைய பங்களிப்புக்கள் போசளர் கட்டிடக்கலை எனப்படும் பாணியின் மேம்பாட்டுக்குப் பெரிதும் உதவியது. கல்வெட்டுக்கள் மூலமும், இவரது கையெழுத்து மூலமும், இவர் சோமநாதபுரத்தில் உள்ள சென்னகேசவர் கோயிலையும், அமிர்தபுரத்தில் உள்ள அமிர்தேஸ்வரர் கோயில் உட்பட்ட நாற்பதுக்கு மேற்பட்ட கட்டிடங்களிலும் இவர் பணி புரிந்துள்ளதாகத் தெரிய வருகிறது. இவர், அழகூட்டலில் திறமை பெற்றவராக இருந்த இவர் 60 ஆண்டுகாலம் பணிபுரிந்துள்ளார். இவரது சிற்பங்களில் சுருக்கமாக மல்லி அல்லது ம என இவர் கையெழுத்து இட்டுள்ளார்.

Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads