ரேகா வேதவியாஸ்
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
அக்சரா என்றும் அழைக்கப்படும் ரேகா என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் முதன்மையாக கன்னட படங்களில் நடித்து வருகிறார். மேலும் தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்துளார்.[6][7][8][9][10] இவர் வடிவழகியான போது, 2001 ஆம் ஆண்டு கன்னடத் திரைப்படமான சித்ரா என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் பல்வேறு தென்னிந்திய மொழிகளில் 30 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
Remove ads
தொழில்
ரேகா கர்நாடகத்தின் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். பெங்களூரின், கெங்கேரியில் உள்ள பாசவா உறைவிட மகளிர் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.[11] இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலையிலையில் பிபிஏ படிப்பை மேற்கொண்டிருந்தார். அதே நேரத்தில் பகுதிநேரத்தில் வடிவழகி மற்றும் நடிப்புத் தொழில் வாழ்க்கையில் ஈடுபட முயன்றார்.[12] இராமோசி ராவ் தயாரித்த கல்லூரி நாடகப் படமான சித்ராவில் நடிக்க ஜெயஸ்ரீ தேவி ஒப்பந்தமானார். அதில் அவர் ஒரு என்ஆர்ஐ மாணவியாக நடித்தார். அதே ஆண்டில், இவர் சுதீப்புடன் பெருவெற்றிப் படமான ஹுச்சாவில் நடித்தார். மேலும் ஸ்ரீனு வைட்லாவின் ஆனந்தம் படத்தின் வழியாக தெலுங்குத் திரைப்படத் துறையில் அறிமுகமானார், இந்த மூன்று படங்களும் வணிக ரீதியாக வெற்றி பெற்றன.[10][13] மேலும் ரவி தேஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த தெலுங்குத் திரைப்படமான தொங்கோடு படத்தில் முதனைமை கதாபாத்திரத்தில் நடித்தார். அதே நேரத்தில் சபாபதியின் முக்கோண காதலை அடிப்படையாகக் கொண்ட புன்னகை பூவே வழியாக தமிழில் அறிமுகமானார். 2003 ஆம் ஆண்டில் இவர் தனது முதல் மற்றும் இன்றுவரையில் நடித்த ஓரே இந்தி படமான முத்தா தி இஸ்யூ படத்தில் ஆர்யா பப்பருடன் இணைந்து நடித்தார். மேலும் பெண் சார்ந்த படமான திரீ ரோசஸ் படத்தில் துணை வேடத்தில் நடித்தார் அதில் ரம்பா, ஜோதிகா, லைலா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தனர். கணேசுடன் இணைந்து கன்னடத்தில் செல்லாட்டாவிலும், அடுத்த ஆண்டு உடுகாட்டாவிலும் ஜோடியாக நடித்தார். இவை வணிக ரீதியாக ஓரளவு வெற்றிபெற்றன.[7] இருமொழி படமான நென்னை நேடு ரேபு / நேற்று இன்று நாளை மற்றும் ரமேஷ் அரவிந்த் இயக்கிய ஆக்சிடன்ட் ஆகியவற்றில் நடித்தார், இது விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது, அதே நேரத்தில் மாஸ்ட் மஜா மாடி, ராஜ் தி ஷோமேன், யோகி படங்களில் சிறப்பு தோற்றங்களில் நடித்தார். 2010 ஆம் ஆண்டில், இவரது அப்பு பப்பு என்ற ஒருபடம் மட்டுமே வெளியானது. அதே நேரத்தில் அண்மையில் வெளியான இவரது படமான பாஸ் படத்தின் வழியாக மீண்டும் தர்ஷனுடன் ஜோடியாக நடித்தார்.[9] இவர் தற்போது பிரேமா சந்திரமாமா,[8] மீண்டும் சபாபதியின் இயக்கத்தில் திகாந்த் உடன் ஜாலி பாய் படத்திலும்,[14] மற்றும் துளசி போன்ற திட்டங்களில் பணியாற்றி வருகிறார்.[15]
Remove ads
திரைப்படவியல்
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads