ரேஞ்சர் 2

From Wikipedia, the free encyclopedia

ரேஞ்சர் 2
Remove ads

ரேஞ்சர் 2 (Ranger 2) என்பது அமெரிக்காவின் நாசாவால் ரேஞ்சர் திட்டத்தில் ஏவப்பட்ட விண்கலன்களில் ஒன்றாகும். இவ்விண்கலம் 1961ஆம் ஆண்டின் நவம்பர் பதினெட்டாம் நாளில் செலுத்தப்பட்டது. இவ்விண்கலம் எதிர்கால நிலவுப் பயணத்திற்குத் தேவையான தரவுகளைச் சேகரிக்க அனுப்பப்பட்டது. காஸ்மிக் கதிர்கள், காந்தப் புலம், கதிர்வீச்சு, தூசிப் பொருட்கள், ஹைட்ரஜன் வாயு, பூமியின் ஈர்ப்பின் தாக்கம் ஆகியவற்றை பற்றிய சோதனைக்காகச் செலுத்தப்பட்டது.[1]

விரைவான உண்மைகள் திட்ட வகை, இயக்குபவர் ...
Remove ads

வடிவம்

இது ரேஞ்சர் 1 விண்கலத்தின் வடிவத்தை ஒத்தது. அறுங்கோண வடிவமுடையது. இதன் அடிப்பாகம் 1.5 மீட்டர் அளவுடையது. இதன் சூரிய மின்தகடுகள் 5.2 மீட்டர் அளவுடையன. இதன் அடிப்புறத்தில் அதிதிறன் அலை வாங்கி/செலுத்தி இணைக்கப்பட்டிருந்தது. இதன் 4 மீட்டர் உயரமுடைய கோபுரத்திலும் அடிப்புறத்திலும் சோதனைக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.

ஏவுதல்

இவ்விண்கலம் பூமியின் தாழ் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு, பின்னர் பாதை மாறுமாறு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பூமியின் தாழ் வட்டப்பாதைக்குப் பின்னர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாய் திட்டமிட்டபடி செலுத்த இயலவில்லை. விண்கலம் நவம்பர் 20, 1961 அன்று பூமிக்குத் திரும்பியது.[1]

இதையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads