ரொசெட்டா விண்கலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரொசெட்டா (Rosetta) என்பது ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு 2004 மார்ச் 2 இல் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஒரு விண்ணுளவி ஆகும். இதனுடன் இணைக்கப்பட்டிருந்த பிலே தரையிறங்கியுடன் ரொசெட்டா 67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ (67பி) என்ற வால்வெள்ளியை மிக விரிவாக ஆராய்ந்தது.[5][6] வால்வெள்ளியை நோக்கிய இதன் பயணத்தின் போது, செவ்வாய்க் கோள், மற்றும் 2867 இசுட்டெயின்சு (2008 செப்டம்பர்), 21 லுத்தேசியா (2010 சூலை) ஆகிய சிறுகோள்களை அணுகிச் சென்றது.[7][8][9]
சூரியனில் இருந்து மிக நீண்டளவு தூரத்தில் இது நிலை கொண்டிருந்தமையால், இதன் சூரியக் கலங்கள் மிகவும் குறைந்தளவு சூரிய ஆற்றலைக் கொண்டிருந்தன. இதனால் விண்கலத்தை முழுமையாக இயக்குவதற்குத் தேவையான மின்னாற்றல் போதாமையாக இருந்ததால் அதனை 31 மாதங்களுக்கு தூக்கத்தில் வைப்பதற்கு அதன் கட்டுப்பாட்டாளர்கள் முடிவெடுத்தனர். 2011 சூன் 8 ஆம் நாள் இவ்விண்கலம் ஆழ்ந்த தூக்கத்துக்கு அனுப்பப்பட்டது[10]. இது மீண்டும் 2014 சனவரி 20 இல் தான் விழித்துக் கொண்டதாகப் பூமிக்குக் குறிப்பை அனுப்பியது.[11] தொடர்ந்து அது வால்வெள்ளியை நோக்கிப் பயணித்தது.[12][13] அடுத்தடுத்த மாதங்களில், 67பி இன் சார்பாக ரொசெட்டாவின் வேகத்தை மட்டுப்ப்படுத்துவதற்காக சில அமுக்கி எரிப்புகள் இடம்பெற்றன. தொடர்ந்து 2014 ஆகத்து 6 இல் அது 67பி வால்வெள்ளியின் சுற்றுப்பாதையை வெற்றிகரமாகச் சென்றடைந்தது.[14]
2014 நவம்பர் 12 இல், இதன் பிலே தரையிறங்கி வெற்றிகரமாக வால்வெள்ளியில் இறங்கியது.[15] ஆனாலும், இதன் மின்கலங்கள் இரண்டு நாட்களில் செயலிழந்தன.[16] 2015 சூன் மற்றும் சூலை மாதங்களில் பிலேயுடனான தொடர்புகள் குறுகிய நேரங்களுக்கு மீள்விக்கப்பட்டன. ஆனாலும், சூரிய ஆற்றல் இழப்புக் காரணமாக, 2016 சூலை 27 இல் தரையிறங்கியுடனான ரொசெட்டாவின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.[17] 2016 செப்டம்பர் 30 இல், ரொசெட்டா விண்கலம் வால்வெள்ளியின் மா'ட் பிராந்தியத்தில் மோதி அதன் திட்டத்தை நிறைவு செய்து கொண்டது.[18][19]
இவ்விண்கலத்திற்கு பண்டைய எகிப்தியத் தூண்களின் ஒன்றான ரொசெட்டாக் கல்லின் நினைவாக ரொசெட்டா எனப் பெயரிடப்பட்டது. தரையிறங்கிக்கு கிரேக்க, எகிப்திய படுகைத் தளக்குறியீடு பொறிக்கப்பட்ட பெலே சதுரக்கூம்பகத்தூணின் நினைவாக பிலே எனப் பெயரிடப்பட்டது.[20][21]
Remove ads
திட்டக் காலக்கோடு
- 2004
- 2 மார்ச் – ஈசாவின் ரொசெட்டா பயணம் 07:17 ஒசநே (04:17 உள்ளூர் நேரம்) பிரெஞ்சு கயானாவின் கயானா விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது.
- 2005
- 4 சூலை – டீப் இம்பாக்ட் விண்கலத்தின் தாக்கியுடனான டெம்பெல் 1 வால்வெள்ளியின் மோதலை அவதானித்தது.[22]
- 2007
- 25 பெப்ரவரி – செவ்வாய்க் கோளை அணுகல்[23]
- 2008
- 5 செப்டம்பர் – 2867 இசுட்டெயின்சு சிறுகோளை அணுகல். விண்கலம் சிறுகோள் படையை 800 கி.மீ. தொலைவில் 8.6 கி.மீ./செ வேகத்தில் கடந்தது.[24]
- 2010
- 16 மார்ச் – பி/2010 ஏ2 என்ற சிறுகோளின் தூசியுடனான வால்பகுதியை அவதானித்தது.[25]
- 10 சூலை – 21 லுத்தேசியா சிறுகோளை அணுகி அதனைப் படம் பிடித்தது.[26]
- 2014

- 14 சூலை – 67பி வால்வெள்ளியின் சீரற்ற மேற்பரப்பின் படங்களை அனுப்பியது.[27][28]
- 6 ஆகத்து – ரொசெட்டா 67பி வால்வெள்ளியை 100 கி.மீ. தொலைவில் அடைந்தது.[29][30][31]
- 12 நவம்பர் – பிலே 67பி வால்வெள்ளியின் தரையில் இறங்கியது.[15]
- 2015
- 14 ஏப்ரல் – வால்வெள்ளியின் கருவில் காந்தப் புலம் எதுவும் இல்லை என அறிவியலாளர்கள் அறிவித்தனர்.[32]
- 11 ஆகத்து – 2015 சூலை 29 இல் வால்வெள்ளியில் இடம்பெற்ற ஒரு திடீர்வெடிப்பின் படங்கள் வெளியிடப்பட்டன.[33]
- 28 அக்டோபர் – 67பி வால்வெள்ளியைச் சுற்றிலும் அதிக அளவு மூலக்கூற்று ஆக்சிசன் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.[34][35]
- 2016
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads