ரொசெட்டாக் கல்

கல்வெட்டு From Wikipedia, the free encyclopedia

ரொசெட்டாக் கல்
Remove ads

ரொசெட்டா கல் (Rosetta Stone) என்பது, கல்வெட்டின் ஒரே பக்கத்தில் இரு மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டுகளை குறிக்கும். ஒரே பத்தியை பட எழுத்தையும் (hieroglyphic) உள்ளடக்கிய இரண்டு எகிப்திய எழுத்துமுறைகளிலும், செந்நெறிக் கிரேக்க மொழியிலும் எழுதிய ஒரு கல்வெட்டு ஆகும். இது கிமு 196 ஆம் ஆண்டில் கிரேக்கத் தாலமி வம்சத்தின் எகிப்திய பார்வோன் ஐந்தாம் தாலமியால் வெட்டப்பட்டது.[1]

விரைவான உண்மைகள் செய்பொருள், அளவு ...
Thumb
கிரேக்க-அரமேய மொழிகளில் அசோகரின், பாக்ராம் கல்வெட்டு, காபூல் அருங்காட்சியகம்

1799 ஆம் ஆண்டில் எகிப்தின் மத்தியதரைக் கடற்கரைத் துறைமுகமான ரொசெட்டாவில், இக்கல்வெட்டு பிரெஞ்சுக்காரரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது 1822 ஆம் ஆண்டில் ஜேன்-பிராங்கோயிஸ் சம்போலியன் (Jean-François Champollion) என்பவரால் வாசித்து மொழிபெயர்க்கப்பட்டது. இக்கல்லின் ஒப்பீட்டு மொழிபெயர்ப்பானது, முன்னர் வாசித்து அறியப்படாத படஎழுத்துக்களை வாசித்து அறிவதற்கு உதவியது. இக்கல்வெட்டு, பலவித வரி நீக்கங்கள் பற்றியும், கோயில்களில் சிலைகள் அமைப்பது தொடர்பான விதிமுறைகளையும் கொண்ட ஒரு ஆணையாகும்.

இந்தக்கல் இதன் அதி உயர்ந்த இடத்தில் 114.4 சதமமீட்டர் அளவும், 72.3 சதமமீட்டர் அகலமும், 27.9 சதமமீட்டர் தடிப்பும் (45.04 அங் x 28.5 அங் x 10.9 அங்) கொண்டது. அண்ணளவாக 760 கிகி (1676 இறாத்தல்) நிறை கொண்ட இது கிரனோடியொரைட்டு (granodiorite) என்னும் கல்வகையைச் சேர்ந்தது ஆகும். இது 1802 ஆம் ஆண்டிலிருந்து இலண்டனில் உள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Remove ads

அசோகரின் பாக்ராம் கல்வெட்டு

ஆப்கானிஸ்தான் நாட்டின் பர்வான் மாகாணத்தில் [2]உள்ள பாக்ராம் [3] நகரத்தில் கிரேக்கம் மற்றும் அரமேய மொழிகளில் எழுதப்பட்ட அசோகர் கல்வெட்டுக்கள் உள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads