ரோகண விஜயவீர
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பட்டபெந்தி தொன் நந்தசிறி விஜேவீர (Patabendi Don Nandasiri Wijeweera, சிங்களம்: පටබැඳි දොන් නන්දසිරි විජෙවීර, ஜூலை 14, 1943 - நவம்பர் 13, 1989) ஒரு மார்க்சியப் புரட்சியாளர். இலங்கையின் தீவிரவாத இயக்கமாக இருந்த ஜே.வி.பி என அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணியை அமைத்து அதன் தலைவராக இருந்தவர். பொலிவியாவின் புரட்சியாளரான சே குவேராவின் வழிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்றியவர். இவரது கம்யூனிசக் கொள்கைகள் இலங்கையின் வறிய மக்களிடையேயும் இளைஞர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றன. இவர் தலைமையில் மக்கள் விடுதலை முன்னணி இலங்கையில் இரு முறை (1971 புரட்சி, 1987-1989 புரட்சி) புரட்சிகளில் இறங்கி தோல்வி அடைந்தது.[1][2] இவர் உலப்பனை என்ற இடத்தில் வைத்து இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு அடுத்த நாள் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.[3]
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கையின் தென் மாகாணத்தில் கோட்டேகொட என்னும் மீன்பிடிக் கிராமத்தில் பிரெஞ்சுப் புரட்சி நினைவு நாள் ஒன்றில் (ஜூலை 14) பிறந்தவர் ரோகண. இவரது தந்தை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கத்தவராக இருந்தவர். கலாநிதி எஸ். ஏ. விக்கிரமசிங்கவுடன் நெருங்கிய தோழராக இருந்தவர்.
உயர் கல்வி
பத்திரிசு லுமும்பா பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் உயர்கல்வி பெற மொஸ்கோ சென்றார். அங்கு மருத்துவத்துடன் மார்க்சியக் கொள்கைகளைத் தீவிரமாகக் கற்க ஆரம்பித்தார். அத்துடன் சோவியத் ஒன்றியத்தில் அக்காலத்தில் நிலவிய சோசலிசம் உண்மையான பொதுவுடைமைக் கொள்கைகளுக்கு ஏற்பானதாக இல்லை என்பதை உணர ஆரம்பித்தார். இதன் காரணமாக அவர் 1964 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads