லர்கானா மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
லர்கானா மாவட்டம் (Larkana District) (சிந்தி: ضلعو لاڙڪاڻو) ; Urdu: ضلع لاڑکانہ) தெற்காசியாவியன் பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் 30 மாவட்டங்களில் ஒன்றாகும். கைர்பூர் கோட்டத்தில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் லர்கானா நகரம் ஆகும். மொகெஞ்சதாரோ தொல்லியல் களங்கள் லர்கானா நகரத்தில் உள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர்களான சுல்பிக்கார் அலி பூட்டோ மற்றும் பெனசீர் பூட்டோ மற்றும் சிந்து மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் மும்தாஜ் அலி புட்டோ லர்கானா நகரத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்.
Remove ads
மாவட்ட நிர்வாகம்
7423 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட லர்கான மாவட்டம் ஆறு வட்டங்களைக் கொண்டிருந்தது. 2005-இல் இம்மாவட்டத்தின் இரண்டு வட்டங்களைக் கொண்டு பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முசாரப் குவாம்பர் சதாக்கோட் மாவட்டத்தை துவக்கினார். தற்போது லர்கானா மாவட்டத்தை டோக்கிரி, பாக்ரனி, லர்கானா, ரட்டோதேரா என நான்கு வட்டம் (தாலுகா)|வட்டங்களாகப்]] பிரித்து நிர்வகிக்கப்படுகிறது. [2]
பொருளாதாரம்
இம்மாவட்டம் வேளாண்மைப் பொருளாதாரத்தை மட்டுமே நம்பியுள்ளது. இங்கு கரும்பு, கோதுமை, நெல், மிளகாய், கொய்யா அதிக அளவில் பயிரிடப்படுகிறது.[3][4]
முக்கிய கல்வி நிறுவனங்கள்
இம்மாவட்டத்தில் லர்கானா இராணுவப் பயிற்சிக் கல்லூரி[5]மற்றும் சுபில்கர் அலி புட்டோ வேளாண்மைக் கல்லூரி முக்கியமானவைகள் ஆகும்.
போக்குவரத்து
இம்மாவட்டத்தின் தலைமையிடமான லர்கானாவிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் மொகெஞ்சதாரோ உள்நாட்டு வானூர்தி நிலையம், நாட்டின் பிற நகரங்களுடன் இணைக்கிறது.
மக்கள் தொகையியல்
7423 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட லர்கானா மாவட்டத்தின் 1998-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 19,27,066 ஆகும். அதில் ஆண்கள் 993576 (51.56 %); பெண்கள் 933576 ( 48.44 %) ஆக உள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி (1981 - 98) 3.14% ஆக உள்ளது. பாலின விகிதம் 100 பெண்களுக்கு 106.4 ஆண்கள் வீதம் உள்ளனர். மக்கள் அடர்த்தி ஒரு சதர கிலோ மீட்டர் பரப்பளவில் 259.6 ஆக உள்ளனர். நகர்ப்புற மக்கள் தொகை 28.90% ஆக உள்ளது. சராசரி எழுத்தறிவு 34.9% ஆக உள்ளது. ஆண்கள் எழுத்தறிவு 48.56% ஆகவும்; பெண்கள் எழுத்தறிவு 20.48% ஆக உள்ளது. மக்கள் தொகையில் சிந்தி மொழியை 97.93% மக்கள் பேசுகின்றனர்.[6]
Remove ads
விளையாட்டு
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் லர்கானா நகரத்தில் கட்டிய பெனாசிர் புட்டோ கிரிக்கெட் விளையாட்டுத் திடல் பன்னாட்டுத் தரத்தில் உள்ளது. கட்டப்பட்டதாகும்.[7][8]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads