லவாசா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
லவாசா (Lavasa) (மராத்தி: लवासा) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்த லவாசா மலையில் உள்ள திட்டமிட்ட ஒரு தனியார் நகரம் ஆகும்.[1][2] லவாசா நகரத்தின் வடிவம் மற்றும் கட்டிடக் கலை நயம் இத்தாலி நாட்டின் போர்டோபினோ நகரம் போன்று கட்டப்பட்டுள்ளது. இத்தாலியின் போர்ட்பினோ நகரத்தின் தெருக்கள் மற்றும் கட்டிடப் பெயர்களே லவாசா நகரத்தின் தெருக்களுக்கும் மற்றும் கட்டிடங்களுக்கும் பெயரிடப்பட்டுள்ளது.
மலை மீதுள்ள லவாசா நகரம் 2500 ஏக்கர் பரப்பளவு கொண்டது என்றும்[1], சிலர் 8,000 ஏக்கர் பரப்பளவு கொண்டது என்றும் கூறுகிறார்கள்[3] இந்நகரத்தின் கட்டுமானப் பொறுப்பை இந்துஸ்தான் கட்டுமான நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.[4] வனத்துறை அனுமதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலங்கள் கொள்முதல் மற்றும் நில ஆக்கிரமிப்புகள் போன்ற பல சர்ச்சைகளால் லவாசா நகரத்தின் கட்டுமானம் இன்றளவும் முற்றுப் பெறவில்லை.[1][5][6]
2010-ஆம் ஆண்டின் இறுதியில் இந்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், சுற்றுச் சூழலுக்கு தீங்கான லவாசா நகரத்தின் கட்டுமான திட்டத்தை நிறுத்த ஆணையிட்டது.
2011-ஆம் ஆண்டின் இறுதியில் இந்த ஆணை திரும்பப் பெறப்பட்டது.[7] லவாசா நகரக் கட்டுமான திட்டத்தின் பரப்பளவு சுருக்கப்பட்டது. லவாசா நகர திட்டத்திற்கான மூலதனம் பெறுவதற்கு பங்குச் சந்தையில் பங்குகளை வெளியிடும் திட்டமும் கைவிடப்பட்டது.[7]
Remove ads
வரலாறு

இந்தியாவின் முதல் தனியார் மலைவாழிட நகரமான லவாசா நகரம் விளங்குகிறது.[8] இத்தனியார் நகரத்தை அஜித் குலாப்சந்த் நிறுவனம் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ளது.[9] இத்தாலி நாட்டின் மலைவாழிட நகரமான போர்ட்பினோ மாதிரியாகக் கொண்டு லவாசா நகரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.[10]
நிலம்
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள முன்சி பள்ளத்தாக்கில் அமைந்த லவாசா நகரம், புனே நகரத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது..[11]
கட்டுமான முன்னேற்றங்கள்
லவாசாவில் 5 நகரங்கள் கட்டத் திட்டமிடப்பட்டது. 2013-இல் இரண்டு நகரங்கள் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.[12]. மேலும் 2011-இல் நான்கு தங்கும் விடுதிகள் மற்றும் கடை வீதிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மற்றும்[13] லவாசாவில் துவக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.[14][14] இங்கு ஒரு மேலாண்மைக் கல்லூரி செயல்படுகிறது.[15]
நகர நிர்வாகம்
2011-ஆம் வரை ஸ்காட் ரைட்டன் லவாசா நகர நிர்வாக அதிகாரியாக செயல்பட்டார்.[16]
விளையாட்டு வசதிகள்
லவாசா தனியார் மலை நகரத்தில் கோல்ப், டென்னீஸ் மற்றும் கால்பந்து விளையாட்டு திடல்கள் உள்ளது.[17][18] மேலும் லவாசா மலையில் நீர் சறுக்கு விளையாட்டு வசதிகள் உள்ளது.
கேளிக்கைப் பூங்கா
லவாசா நகரத்தில் 65 ஏக்கர் பரப்பில் ஒரு கேளிக்கைப் பூங்கா நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது.[19]
பிற வசதிகள்
உடல் நலத்திற்கும், உடல் கட்டுக்கோப்பை வளர்ப்பதற்கும் 200 ஏக்கர் பரப்பில் ஒரு மையமும்[20] மற்றும் மூலிகைச் செடிகளை வளர்ப்பதற்கான தோட்டமும் நிறுவப்பட்டுள்ளது.
Remove ads
பிணக்குகள்
சுற்றுச் சூழல் சீர்கேடு
மேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுச் சூழல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என இந்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வன அமைச்சகம் லவாசா நகர கட்டுமானத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க மறுத்தது.[1][21] லவசா நகரக் கட்டுமானத்தினால் மேற்கு தொடர்ச்சி மலையின் 325 காட்டுயிர்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.[22] 9 மலையை குடையவோ, வெட்டவோ கூடாது, குடியிருப்புகளின் சாக்கடை நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும் போன்ற நிபந்தனைகளுடன் நவம்பர் 2011-இல் லவாசா நகரக் கட்டுமானத்திற்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.[23]
நில ஆக்கிரமிப்பு
உள்ளூர் மக்களும், மாநில அரசும் லவாசா நகர நிர்வாகம் நில ஆக்கிரமிப்புகளில் ஈடுப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினர். லவாசா நகர நிர்வாகம் 600 ஹெக்டேர் வேளாண் நிலத்தை உள்ளூர் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளதன் மூலம் அரசுக்கு வரவேண்டிய சொத்து பத்திரத் தாள் முத்திரை வரி ஏமாற்றப்பட்டுள்ளது என மகாராஷ்டிரா மாநில அரசின் சுற்றுப்புறச் சூழல் துறை அறிக்கை வெளியிட்டது. மேலும் லவாசா நிர்வாகம் 141 ஏக்கர் நிலத்தை மாநில அரசிடமிருந்து நீண்டகால குத்தகைக்கு எடுத்துள்ளதுடன், 98 ஹெக்டேர் நிலத்தை அனுமதியின்றி ஆக்கிரமித்துள்ளது.[24]
நீர் ஆதாரங்களை பயன்படுத்தல்
புனே நகரத்திற்கு மாநகராட்சி வழங்கும் குடிநீரை லவாசா தனியார் நகரம் பெறுவதால் புனே நகரத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.[25]
கட்டுமானத்தை நிறுத்த ஆணை
இந்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஆணையால் லவாசா நகரத்தின் கட்டுமானம் 2010 - 2011 ஆண்டுகளில் தடைப்பட்டது.[26]
9 நவம்பர் 2011-இல் மீண்டும் ல்வாசா நகரக் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.[27]
உறவினர்களுக்கு சலுகைகள்
மகராட்டிரா மாநில அரசியல் சாணக்கியரான சரத் பவாரின் குடும்ப உறவினர்கள் சுற்றுப்புறச் சூழல்களுக்கு எதிரான லவாசா நகரக் கட்டுமானத் திட்ட நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருந்ததால், நகரக் கட்டுமான திட்டத்திற்கு தேவையான அரசின் ஒப்புதல்கள் எவ்வித நிபந்தனைகள் இன்றி எளிதாக கிடைத்தது.[28] 2002 - 2004-ஆம் ஆண்டுகளில் சரத் பவாரின் மகள் சுப்பிரியா சுலே மற்றும் மருமகன் பெயரில், லவாசா நகர திட்ட நிறுவனத்தின் 20% மேற்பட்ட பங்குகள் இருந்தன. பின்னர் தங்களின் பங்குகளை விற்றுவிட்டனர்.
Remove ads
படக்காட்சிகள்
- லவாசா நகரமும், ஏரியும்
- லவாசா நகர மையம்
- லவாசா நகரத்தின் வான்பரப்புக் காட்சி
- இரவில் லவாசா நகரக் காட்சி
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
