லாக்கீட் மார்ட்டின்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

லாக்கீட் மார்டின் (Lockheed Martin) விண்வெளி, ஆயுதங்கள் தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு துறையில் ஈடுபட்டுள்ள ஒரு அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமாகும். இது மார்ச் 1995 இல் மார்ட்டின் மரியெட்டா மற்றும் லாக்கீட் நிறுவனங்கள் ஒன்றிணைந்ததன் மூலம் உருவாக்கப்பட்டது. வாசிங்டன் அருகே மேரிலாந்தில் உள்ள பெதெசுதாவில் இதன் தலைமையகம் உள்ளது. சனவரி 2022 நிலவரப்படி, இந்த நிறுவனத்தில் உலகம் முழுவதும் சுமார் 60,000 பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் உட்பட ஏறத்தாழ 115,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது.[3]

விரைவான உண்மைகள் வகை, முந்தியது ...

லாக்கீட் மார்ட்டின் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் துறையில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும். 2014 நிதியாண்டிற்கான வருவாயின் அடிப்படையில் இது உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்ததாரர் ஆகும்.[4] 2013 இல், நிறுவனத்தின் வருவாயில் 78% இராணுவ தளவாடங்கள் விற்பனையில் இருந்து வந்தது.[5] அமெரிக்க அரசாங்க ஒப்பந்ததாரர்களின் பட்டியலில் முக்கியமான நிறுவனமான லாகிக்கீட் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையின் நிதி ஒதுக்கீட்டில் ஏறத்தாழ 10% நிதியைப் பெற்றது.[6][7]

இந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானத்தில் பாதி அமெரிக்காவின் பாதுகாப்புத் துறைக்கு தளவாடங்கள் விற்பதில் மூலம் பெறப்படுகின்றது. இந்த நிறுவனம் மற்ற அமெரிக்க அரசு நிறுவனங்கள் மற்றும் துறைகளான அமெரிக்காவின் எரிசக்தி துறை மற்றும் தேசிய வனறிவியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா) ஆகியவற்றுடனும் ஒப்பந்தங்களைக் செய்துள்ளது.[8]

லாக்கீட் மார்ட்டின் வானறிவியல், ஏவுகணைகள், சுழல் அமைப்புகள் மற்றும் வின்வெளி ஆகிய நான்கு வணிகப் பிரிவுகளாக செயல்படுகிறது.[9] இந்த நிறுவனம் சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் மற்றும் எப்-35 போன்ற இராணுவப் போக்குவரத்து மற்றும் சண்டை வானூர்திகளைத் தயாரிக்கின்றது. இது பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.[10]இந்த நிறுவனம் சுகாதார அமைப்புகள், அணுசக்தி மற்றும் எரிசக்தி துறைகளிலும் முதலீடு செய்கிறது.[11]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads