லாக்டோசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலாக்டோசு(Lactose) என்பது ஓர் இரட்டைச்சர்க்கரை ஆகும். பாலில் உள்ள காலக்டோசு, குளுக்கோசு ஆகியவற்றிலிருந்து வருவிக்கப் பட்டதாகும். பாலின் எடையில் 2–8% அளவு லாக்டோசு இருக்கும்.[3] இருப்பினும், இந்த லாக்டோசு அளவு பல்வேறு சிற்றினங்கள், வகைகள், தனித்தனி பால்தரும் உயிரினங்களிடையே காலச்சூழ்நிலைகளினால், வேறுபட்டுக் காணப்படுகின்றன. இலத்தீனிய சொல்லான லாக் (lac/lactis) என்பதுடன், சர்க்கரை என்பதைக் குறிக்கும் -ஓசு(-ose) இணைந்து, இலாக்டோசு என்ற தமிழ்ச்சொல் உருவாகிறது.[4]. இதன் சூத்திரம் C12H22O11 ஆகும். இதன் ஐட்ரேட்(hydrate) சூத்திரம் C12·11H2O என்பது, மாற்றியன் சுக்குரோசைக் குறிக்கிறது.
Remove ads
வரலாறு
1633 ஆம் ஆண்டு இத்தாலிய மருத்தவரான "பேபரிசோ பார்டோலெட்டீ" (Fabrizio Bartoletti (1576–1630), லாக்டோசு பிரித்தெடுத்தலைப் பற்றி மேலோட்டமாக எழுதினார்.[5] 1843 ஆம் ஆண்டு, இலாக்டோசு என்ற பெயரினை பிரெஞ்சு வேதியியலாளர் டூமாசு (Jean Baptiste André Dumas) (1800-1884) [6] முன்மொழிந்தார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads