லாத்தா கிஞ்சாங்

From Wikipedia, the free encyclopedia

லாத்தா கிஞ்சாங்map
Remove ads

லாத்தா கிஞ்சாங் (Latah Kinjang) மலேசியாவின் பேராக் மாநிலத்தில் பாத்தாங் பாடாங் மாவட்டத்தில் உள்ள நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் செண்டிரியாங் எனும் சிறுநகரம் இருக்கிறது. இந்நீர்வீழ்ச்சி மலேசியாவிலேயே மிக பிரபலமானது. மலேசியாவில் மிக உயரமான நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாகும்.[1] வடக்கு - தெற்கு நெடுஞ்சாலை வழியாகச் செல்லும் போது இந்த நீர்வீழ்ச்சியை எளிதாகப் பார்க்க முடியும். இதற்கு ஒரு நேரடியான சாலைத் தொடர்பு இல்லாததால் வாடிக்கையாக அதிகமானோர் செல்வது இல்லை.

விரைவான உண்மைகள் லாத்தா கிஞ்சாங் Lata Kinjang, அமைவிடம் ...

தாப்பா நகரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் இந்த லாத்தா கிஞ்சாங் எனும் நீர்வீழ்ச்சி இருக்கிறது. மலேசியாவின் பல உயரமான மலைகளைக் கொண்ட மத்தியமலைத் தொடரும் இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில்தான் இருக்கிறது. நீர்வீழ்ச்சியை அடைய செண்டிரியாங் எனும் சிறுநகரத்தையும் தாண்டிச் செல்ல வேண்டும். இந்த நீர்வீழ்ச்சியைச் சுற்றியுள்ள காடுகளில் பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள்.

பத்து மெலிந்தாங், லூபுக் காத்தாக், டூசுன் மூடா, ஜாலான் காச்சு, கம்போங் சூனு எனும் பெயர்களில் கிராமங்கள் உள்ளன. இவர்களுக்கு காடுகளே வாழ்வதாரமாக இருக்கின்றன. இப்போது அவர்களும் நவீனமயப் பிடியில் சிக்கி பல்வேறு மாற்றங்களைப் பெற்று வருகின்றனர்.[2] நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் வழியில் இவர்கள் சிறு சிறு கடைகள், குடில்களை வைத்து வியாபாரம் செய்கின்றனர்.

காடுகளில் கிடைக்கும் வேர்கள், மரப்பட்டைகள், லேகியங்கள், பிசின்கள், மலைத் தேன் போன்றவற்றை விற்கின்றனர். ஒரு காலத்தில் காடுகளில் வாழ்ந்த இவர்கள் இப்போது வியாபாரமும் செய்யத் தொடங்கிவிட்டனர்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads