லாத்தேஹார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
லோத்தேஹார் (Latehar), இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் மேற்கில் அமைந்த லாத்தேஹார் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும். இந்நகரம் மாநிலத் தலைநகரான ராஞ்சிக்கு வடமேற்கில் 107 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மலைக்காடுகள் சூழ்ந்த லோத்தேஹார் நகரத்தைச் சுற்றிலும் கனிம வளங்கள் நிறைந்தது. இந்நகரத்தைச் சுற்றிலும் லோஹர்தக்கா, கும்லா, மேதினிநகர், சத்திரா போன்ற நகரங்கள் உள்ளது. இந்நகரத்தின் 25% மக்கள் பட்டியல் சமூகத்தினர் ஆவார். ஜார்கண்ட் மாநிலத்தின் இரண்டாவது பெரிய அருவி இந்நகரத்தில் உள்ளது. இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 387 மீட்டர் (1,270 அடி) உயரத்தில் உள்ளது.
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 13.42 எக்டேர் பரப்பளவும், 5315 வீடுகளும் கொண்ட லோத்தேஹார் பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகை 26,981 ஆகும். அதில் ஆண்கள் 14152 மற்றும் பெண்கள் 12829 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 907 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 77.85% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5168 மற்றும் 1436 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 20,800, இசுலாமியர் 4,387, கிறித்தவர்கள் 984 மற்றும் பிறர் 810 பேராக உள்ளனர்.[1]
Remove ads
பொருளாதாரம்
இந்நகர மக்கள் மலைவளம், காட்டு வளம், கனிம வளம் மற்றும் வேளாண்மையை நம்பி வாழ்கின்றனர். இங்குள்ள மலைக்காடுகளிலிருந்து கிடைக்கும் காட்டு வளங்களான தேன், மூலிகைச் செடிகளைச் சேகரித்து விற்பனை செய்கின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள நிலக்கரிச் சுரங்களில் வேலை செய்கின்றனர்.[2][3]இங்கு எஸ்ஸார் நிறுவனத்தின் 1800 மெகா வாட் திறன் கொண்ட நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையம் இயங்குகிறது.[4]
கல்வி
- செயிண்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி
- லோத்தேஹார் பொதுப் பள்ளி
- லோத்தேஹார் கலை & அறிவியல் கல்லூரி
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads