லான்சு ஆம்ஸ்டிராங்
அமெரிக்கத் தொழில்முறை மிதிவண்டி வீரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
லான்சு ஆம்ஸ்டிராங் (பிறப்பு: செப்டம்பர் 18, 1971), முன்னாள் அமெரிக்கத் தொழில்முறை மிதிவண்டி வீரர். இவர் "டூவ தே பிரான்சு" (Tour de France) என்ற உலகப்புகழ் பெற்ற மிதிவண்டி சாலைப் போட்டியை 1999 முதல் 2005 வரை தொடர்ந்து ஏழு முறை வென்றார், ஆனாலும் இவர் ஊக்க மருந்து உள்ள போதைப் பொறுட்களைப் பயன்படுத்தியதாலும் அப்பொருட்களை சக வீரர்களுக்கு அளித்து அவர்களை பயன்படுத்த தூண்டியதாலும், ஆகத்து 1998 முதல் இவர் வென்ற எல்லா பட்டங்களும் பரிக்கப்பட்டு, இவர் வாழ்நாள் முழுதும் மிதிவண்டி போட்டிகளில் பங்குபெற தடை விதிக்கப்பட்டது. இம்முடிவுக்கு இவர் மேல் முறையீடு செய்யவில்லை.
1996இல் இவருக்கு வந்த விறைப் புற்றுநோய் தீவிரமடைந்து மூளை, நுரையீரல் ஆகிய உறுப்புகளுக்கு பரவிற்று. மிதிவண்டி ஓட்டுதல் என்பதே சிரமம் என்ற நிலையிலிருந்த லான்சு, தீவிர கீமோ சிகிச்சை எடுத்துக்கொண்டு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பினார்.
Remove ads
ஓய்வுக்குப் பிறகு மீண்டும்
மூன்று ஆண்டு ஓய்வுக்குப் பின் 2009 டூவ ட பிரான்சில் கலந்து கொண்ட லான்சு மூன்றாவது இடத்தைக் கைப்பற்றினார். ஆல்ப்சு மலை-ஏற்றங்களிலும் கால-ஓட்டங்களிலும் அவரால் சிறப்பாக சோபிக்க இயலாததும் அவரது அணியின் [அஸ்டானா] முன்னணி வீரரான ஆல்பர்ட்டோ காண்டடாரின் வெற்றிக்கு வழிவகுக்கும் வகையில் ஓட்டியதுமே இவர் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டதற்கான காரணங்களாக கூறப்படுகிறன.
பதவி பறிப்பு
அமெரிக்க போதை மருந்து தடுப்பு துறை இவர் போதை மருந்து உட்கொண்டதாலயே ஏழுமுறை டூவ ட பிரான்சின் வெற்றியாளராக முடிந்தது என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதை எதிர்த்து இவர் வாதாட மறுத்து விட்டதால் இவரின் ஏழு வெற்றிகளும் செல்லாது என அமெரிக்க போதை மருந்து தடுப்பு துறை அறிவித்துள்ளது. இவர் சைக்கிள் போட்டிகளில் பங்கெடுக்கவும் வாழ்நாள் தடை விதித்துள்ளது. பன்னாட்டு சைக்கிள் சம்மேளனம் இத்தடை தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கவில்லை.[1] வழக்கு தொடுத்தாலும் இவர் தான் எப்போதும் போதை மருந்து உட்கொண்டதில்லை என்றும் வழக்கை எதிர்த்து வழக்காட தனக்கு இனிமேலும் சக்தியில்லை என்றும் கூறியுள்ளார்.[2]
அக்டோபர் 22, 2012 அன்று இந்த விளையாட்டை ஒழுங்குபடுத்தும் அமைப்பான மிதிவண்டி ஓட்டிகள் பன்னாட்டுச் சங்கம் (UCI) அமெரிக்க போதை மருந்து தடுப்பு துறையின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு வாழ்நாள் தடையையும் முன்பு பெற்ற விருதுகளை பறித்ததையும் உறுதி செய்தது.[3]
சனவரி 4, 2013 அன்று ஓப்ரா வின்ஃப்ரேயுடனான நேர்காணலில் இவர் போதை மருந்து உட்கொண்டதாலயே ஏழுமுறை டூர் தே பிரான்சின் வெற்றி அடைந்ததை முதன்முறை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.[4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads