லால் பகதூர் சாஸ்திரி விளையாட்டரங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
லால் பகதூர் சாஸ்திரி விளையாட்டரங்கம் (The Lal Bahadur Shastri Stadium (தெலுங்கு: లాల్ బహదూర్ శాస్త్రి స్టేడియం) ஐதராபாத்து, தெலங்கானாவில் உள்ள விளையாட்டரங்கம் ஆகும். பதே மைதானம் என அழைக்கப்பட்ட இந்த அரங்கத்தில் துடுப்பாட்டம் மற்றும் கால்பந்து போட்டிகள் நடைபெறுகிறது.[1] இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரியாக இருந்த லால் பகதூர் சாஸ்திரியின் நினைவாக 1967 இல் இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
Remove ads
வரலாறு
அசிஃப் ஜஹி எனும் ஐதராபாத் நிசாமின் காலத்தில் இது போலோ மைதானமாக இருந்தது.[2][3] செகாந்திராபாத்திலுள்ள ஜிம்கானா அரங்கத்தில் போதிய அளவில் இருக்கை வசதிகள் இல்லாமல் இருந்தது.[4] எனவே சர்வதேச போட்டிகள் இந்த மைதானத்தில் நடந்தது. நவம்பர் 1995 இல் நியூசிலாந்துக்கு எதிராக முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி நடந்தது.[5]
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads