லிசிமச்சூஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
லிசிமச்சூஸ் (Lysimachus) (கிரேக்கம்: Λυσίμαχος, Lysimachos; கி மு 360 – 281), மாசிடோனியாவின் படைத்தலைவரும், அலெக்சாண்டரின் நண்பரும் ஆவார். அலெக்சாண்டரின் மறைவுக்குப் பின்னர் ஹெலனிய காலத்தில் நடந்த வாரிசுரிமைப் போரின் முடிவில், கிரோக்கப் பேரரசின் அனதோலியா மற்றும் மாசிடோனியா பகுதிகளைக் கைப்பற்றி, கி மு 306இல் மன்னராக முடிசூட்டுக் கொண்டார். லிசிமச்சூஸ் இராச்சியத்தை 26 ஆண்டுகள் ஆட்சி புரிந்தவர்.[1]
Remove ads
ஆட்சியில்
அலெக்சாண்டரின் மறைவிற்குப் பின்னர், லிசிமச்சூஸ் கிரேக்க பேரரசின் திராஸ் பகுதியின் மன்னராக கி மு 306இல் முடிசூட்டிக் கொண்டார். பின்னர் மாசிடோனியா மற்றும் அனதோலியா பகுதிகளை கைப்பற்றினார்.
பின்னர் இவரது ஆட்சிப் பகுதிகளில் இருந்த திராஸ் மற்றும் அனதோலியாவையும், தாலமைக் பேரரசின் தாலமி சோத்தர் மற்றும் செலூக்கஸ் நிக்காத்தர் கைப்பற்றி கொண்டனர். மீதமிருந்த மாசிடோனியாவை கி மு 281இல் தாலமைக் பேரரசின் தாலமி கெரானெளஸ் கைப்பற்றி கொண்டதால் இவரது 26 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
மேலதிக வாசிப்பு
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads