மலாக்கா லிட்டில் இந்தியா

மலாக்கா குட்டி இந்தியா From Wikipedia, the free encyclopedia

மலாக்கா லிட்டில் இந்தியாmap
Remove ads

லிட்டில் இந்தியா மலாக்கா, (ஆங்கிலம்: Little India, Malacca; மலாய்: Little India, Melaka; சீனம்: 马六甲小印度) என்பது மலேசியா, மத்திய மலாக்கா மாவட்டம், மலாக்கா மாநகரில் மலேசிய இந்தியர் கணிசமான அளவிற்கு வாழும் இடங்களில் ஒன்றாகும்.[1][2]

விரைவான உண்மைகள் லிட்டில் இந்தியாமலாக்கா, நாடு ...

மலாக்கா குட்டி இந்தியா என்று அழைக்கப்படும் இந்த இடம், மலாக்கா மாநகர்ப் பகுதியில் மிகவும் பரபரப்பான பகுதிகளில் ஒன்றாகவும்; மலாக்காவில் இந்திய இனத்தின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் ஓர் இடமாகவும் அறியப் படுகிறது.

Remove ads

வரலாறு

1910-ஆம் ஆண்டுகளில் மலாக்காவின் ஆங்கிலேய ஆளுநராக லிட்டில்டன் பைப் உல்பெர்ஸ்டன் (Littleton Pipe Wolferstan) என்பவர் இருந்தார். அவரின் பெயரில் மலாக்காவில் ஒரு சாலை அமைக்கப்பட்டது.

அதன் பெயர் உல்பெர்ஸ்டன் சாலை. இதன் இப்போதைய பெயர் ஜாலான் பெண்டகாரா (Jalan Bendahara) என்று மாற்றம் கண்டு உள்ளது. இந்தச் சாலையில் தான் மலாக்கா லிட்டல் இந்தியா அமைந்து உள்ளது.[3]

காலனித்துவ அதிகாரி

லிட்டில்டன் பைப் உல்பெர்ஸ்டன், 1910 - 1920-ஆம் ஆண்டுகளில் பினாங்கு, சிங்கப்பூர், கெடாவில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியவர். 1889 டிசம்பர் 3-ஆம் தேதி பிரித்தானிய காலனித்துவ அதிகாரியாக மலாக்காவுக்கு வந்தார்.

கடைசியாக இவர் மலாக்காவின் ஆளுநராக, அதாவது ரெசிடெண்டாகப் பதவி வகித்தார். மலாக்காவின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காறி உள்ளார்.[3]

செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயம்

மலாக்கா லிட்டல் இந்தியா சாலையும் பூங்கா ராயா சாலையும் சந்திக்கும் முனையில் செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயம் உள்ளது. மலேசியாவில் மிகப் பழைமையானது. ஏற்கனவே போர்த்துகீசியரால் கட்டபட்ட ஆலயத்தை டச்சுக்காரர்கள் இடித்துத் தள்ளி விட்டார்கள்.

பின்னர் 1710-ஆம் ஆண்டு சீரமைப்புச் செய்யப்பட்டது. ஜப்பானியர் (Kempeitai) காலத்தில் அந்த ஆலயம் கருங்குகை என்று அழைக்கப்பட்டது.

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads