வஜ்ரகீலயர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வஜ்ரகீலயர் அனைத்து புத்தர்களின் ஆற்றலின் செயல்பாடுகளின் உருவாக கருதப்படும் யிதம் ஆவார்.தர்மத்தை பின்பற்றுகையில் வரும் தடைகளையும் எதிர்மறையான சிந்தனைக்களையும் அழிக்கவே இவர் உக்கிரமான ஆனால் கருணையுடைய உருவத்தில் காட்சியளிக்கிறார்.
வஜ்ரகீலயம் என்பது பௌத்தத்தில் பயன்படுத்தப்படும் ஒரு சம்பிரதாய குறுவாள் ஆகும். இதை இந்து மதத்தில் கீலயம் என்று அழைப்பர்.
நம்பிக்கைகள்
தடைகளையும் தெளிவற்ற நிலைகளையும் தீர்க்கக்கூடிய ஒரு முக்கியமான வஜ்ரயான தேவதாமூர்த்தியாவார். பத்மசம்பவர் கூட தடைகளை நீக்குவதற்காக முதலில் வஜ்ரகீலயரையே வணங்கினார்.
வஜ்ரகீலயர் புத்தர்களின் மனதில் நிகழும் செயல்களின் உருவகமாகவும் கருதப்படுகிறார். சில சமயங்களில் இவர் வஜ்ரபாணியின் உக்கிர உருவமாகவும் கருதப்படுகிறார். சாக்யப பிரிவின் முக்கியான தேவதாமூர்த்தியாவார். இவர் வஜ்ரகுமாரர் எனவும் அழைக்கப்படுகிறார்.
Remove ads
சித்தரிப்பு
வஜ்ரகீலயர் மூன்று தலைகள், ஆறு கரங்கள் மற்று நான்கு பாதங்களுடன் காட்சிதருகிறார். வஜ்ர கீலயரின் 3 வலக்கரங்களின் முன் உள்ள வலக்கரத்தை தவிர ஏனைய இரண்டு கரங்களிலும் முறையே ஐந்து மற்று ஒன்பது கவர்முட்கருவிகள் உள்ளன. முன்னுள்ள வலக்கரத்தில் கீலயத்துடனும் வரத முத்திரையுடனும் திகழ்கிறது. வலக்கரங்கள் மூன்று முறையே திரிரத்தினம், திரிசூலம் மற்றும் கீலயம் ஏந்திய வண்ணம் உள்ளன. இவரது பின் புறத்தில் யானையின் தோலும், மனிதனின் தோல் முன் புறத்தில் மார்பின் குறுக்கே காணப்படுகிறது. இவரது இடுப்பில் புலியின் தோல் கட்டப்பட்டுள்ளது. மேலும் இவர் நாகாபரணங்களை அனிந்தவராக காட்சிதருகிறார். ஒட்டுமொத்தத்தில் இவரது சித்தரிப்பு மிகவும் உக்கிரமாக காட்டப்படுகிறது. எனினும் இவர் கருணை நிறைந்தவராக கருதப்படுகிறார்.
வஜ்ரகீலயரின் பூஜை சாக்யப பிரிவினாரால் இடைவிடாது நடத்துப்பட்டு வருகிறது.
Remove ads
மேற்கோள்கள்
- மூலம்: http://www.siddharthasintent.org/Programs/1204-vajrakilaya-taiwan2.html பரணிடப்பட்டது 2008-03-04 at the வந்தவழி இயந்திரம் (accessed: Tuesday, 30 January 2007)
- Khenpo Namdrol Rinpoche (1999). The Practice Of Vajrakilaya (paperback). Snow Lion Publications. ISBN-10: 1559391030 & ISBN-13: 978-1559391030
- http://www.paldensakya.org.in/newsdisplay.asp?newsid=4 பரணிடப்பட்டது 2008-03-05 at the வந்தவழி இயந்திரம் (accessed: Tuesday, 30 January 2007)
- http://www.vajrakilaya.org/ (accessed: Tuesday, 30 January 2007)
- Beer, Robert (1999). The Encyclopedia of Tibetan Symbols and Motifs (Hardcover). Shambhala. ISBN-10: 157062416X, ISBN-13: 978-1570624162
- Cleland, Elizabeth (2001). The Vajrakilaya Sadhana: An Euro American Experience of a Nyingma Ritual. Source: (accessed: July 31, 2007)
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads