வடகிழக்கு இந்தியா
வடகிழக்கு இந்திய மாநிலங்களின் குழு From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏழு சகோதரி மாநிலங்கள் அல்லது வடகிழக்கு இந்தியா (Seven Sister States) என்பது இந்தியாவின் வடகிழக்கில் உள்ள எட்டு சிறிய மாநிலங்களைக் குறிக்கும். அவையாவன: அருணாசலப் பிரதேசம், அசாம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், மேகாலயா, சிக்கிம் மற்றும் திரிபுரா. இந்தியாவின் மக்கள்தொகையில் 3.8% இங்கு வசிக்கின்றனர். பிற மாநிலங்களில் ஒப்பிடும் போது வடகிழக்கு மாநிலங்கள் அரசு பேருந்துகள், தொழில்சாலைகள் ஆகியவை குறைந்த அளவே உள்ளன. அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், மேகாலயா, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகியவை வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்கள். அசாம் மாநிலம் மட்டும் வளர்ச்சியில் சற்று உயர்ந்தவை.


பண்பாடு, சமூக மற்றும் அரசியல் தளங்களில் இப்பதம் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வேழு மாநிலங்களும் “வட கிழக்கு மாநிலங்கள்” என்றும் கூட்டாக வழங்கப்படுகின்றன.
Remove ads
வடகிழக்கு இந்திய மாநிலங்களின் உருவாக்கம்
தற்கால வடகிழக்கு இந்தியவை ஆண்ட அகோம் பேரரசு மற்றும் மணிப்பூர் இராச்சியங்களை, 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பர்மியர்கள் கைப்பற்றினர். பின்னர் 1824 – 1826ல் நடைபெற்ற முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போரில், பிரித்தானிய இந்தியா ஆட்சியாளர்கள் பர்மியர்களை வென்று, வடகிழக்கு இந்தியா முழுவதும் பிரித்தானிய இந்தியாவில் இணைத்தனர். வடகிழக்கு இந்தியப் பகுதிகள் 1826 முதல் 1905 முடிய வங்காள மாகாணத்திலும், 1905ல் வங்காளப் பிரிவினைக்குப் பின்னர் 1905 முதல் 1912 முடிய கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணத்திலும் இருந்தது. பின்னர் 1912 முதல் புதிய அசாம் மாகாண நிர்வாகத்தின் கீழ் வடகிழக்கு இந்தியப் பிரதேசங்கள் வந்தன.[1]
1947ல் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் உருவான இந்திய ஒன்றியத்தின் அசாம் மாகாணத்தில், மணிப்பூர் இராச்சியம் மற்றும் திரிபுரா இராச்சியம் போன்ற சுதேச சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டது.
அசாம் மாநிலத்திலிருந்த நாகாலாந்து 1963லும், மேகாலயா 1972லும், அருணாச்சலப் பிரதேசம் 1975லும், மிசோரம் 1987லும் புதிய மாநிலங்களாக அமைக்கப்பட்டது.[2] மணிப்பூர் மற்றும் மேகாலயாப் பகுதிகள் மாநில அங்கீகாரம் பெறும் வரை, 1956 முதல் 1972 முடிய இந்திய ஒன்றியப் பகுதிகளாக செயல்பட்டது.
தனி நாடாக இருந்த சிக்கிம் பாதுகாப்பு காரணங்களால் 1975ம் ஆண்டில் இந்தியாவுடன் இணைந்தது. 2002ல் வடகிழக்கு மண்டலக் குழுவில் சிக்கிம் எட்டாவது உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது.[3]
பிரித்தானிய இந்திய அரசில் அசாம் மாகாணத்தின் தலைநகராக சில்லாங் நகரம் விளங்கியது. பின் சில்லாங் நகரம் 1972ல் மேகாலயா மாநிலத்தின் தலைநகரானாது.[4] அசாம் மாநிலத்தின் தலைநகராக குவகாத்தி நகர்புறத்தில் அமைந்த திஸ்பூர் தலைநகரானது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads