மணிப்பூர் இராச்சியம்
வடகிழக்கு இந்தியாவில் இருந்த ஒரு இராச்சியம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மணிப்பூர் இராச்சியம் (Kingdom of Manipur or Kangleipak Kingdom) பண்டைய இந்திய இராச்சியங்களில் பொ.ஊ. 33 முதல் பொ.ஊ. 1949 வரை தொடர்ந்து ஆட்சியில் இருந்த இராச்சியம் ஆகும். மணிப்பூர் இராச்சியத்தின் தலைநகராக இம்பால் நகரம் விளங்கியது. பொ.ஊ. 1824-இல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வகுத்த துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்ட மணிப்பூர் இராச்சிய மன்னர்கள், ஆண்டுதோறும் கம்பெனியாளர்களுக்கு கப்பம் செலுத்தி, பிரித்தானிய இந்தியாவின் பாதுகாப்பில் இருந்தனர்.[1] இந்திய விடுதலைக்குப் பின்னர் 1949-இல் மணிப்பூர் இராச்சியம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
Remove ads
அமைவிடம்
மணிப்பூர் இராச்சியத்தின் மேற்கில் அசாம் மாகாணம், கிழக்கில் பிரித்தானிய பர்மா, வடக்கில் தற்கால நாகலாந்து, தெற்கில் தற்கால மிஸோரம் எல்லைகளாக இருந்தது.
வரலாறு
இருபதாம் நூற்றாண்டில் இவ்விராச்சியத்தின் பரப்பளவு 22,327 சகிமீ (8,621 சதுர மைல்) மற்றும் 467 கிராமங்களும் கொண்டதாக இருந்தது. 1714 ஆண்டு முதல் மணிப்பூர் இராச்சிய மன்னர்கள் இந்து சமயத்தின்வைணவப் பிரிவை கடைபிடிக்கத் துவங்கினர்.
1754-இல் மணிப்பூர் இராச்சியம் மற்றும் அசாம் பகுதிகளை பர்மா இராச்சியத்தினர் கைப்பற்றினர். மணிப்பூரை மீட்க மணிப்பூர் இராச்சிய மன்னர் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனியிடம் இராணுவ உதவியைக் கோரினார்.[2] 1824 – 1826களில் நடைபெற்ற முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போரின் முடிவில் பர்மா இராச்சியமிடமிருந்து மணிப்பூர் இராச்சியம் மற்றும் அசாம் மாகாணம் மீட்கப்பட்டது. 1824 முதல் மணிப்பூர் இராச்சியம், பிரித்தானிய இந்தியாவிற்கு அடங்கிய சுதேச சமஸ்தானமாக விளங்கியது. 1949-இல் மணிப்பூர் இராச்சியம் இந்தியாவுடன் இணைந்தது. தற்போது இந்த இராச்சியம் இந்தியாவின் மணிப்பூர் மாநிலமாக உள்ளது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads