வடகிழக்கு பிரதேச மேம்பாட்டு அமைச்சகம், இந்தியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம், செப்டம்பர் 2001இல் நிறுவப்பட்ட இந்திய அரசின் அமைச்சகமாகும். இது வடகிழக்கு இந்தியாவில் உள்ள அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய எட்டு மாநிலங்களின் சமூக-பொருளாதார வளர்ச்சி தொடர்பான விஷயங்களைக் கையாள்வதற்காக இந்த அமைச்சகம் செயல்படுகிறது[2] இந்த அமைச்சகத்தின் நோக்கம் வடகிழக்கு இந்தியாவின் உள்கட்டமைப்பு தடைகளை நீக்குதல், குறைந்தபட்ச அடிப்படை சேவைகளை வழங்குதல், தனியார் முதலீட்டுக்கான சூழலை உருவாக்குதல், பாதுகாப்பு மற்றும் நீடித்த அமைதிக்கான தடைகளை நீக்குதல் உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சியில் மத்திய அமைச்சகங்கள் / துறைகள் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தின் மாநில அரசுகளுக்கு இடையே ஒரு ஒருங்கிணைப்பாளராக இந்த அமைச்சகம் செயல்படுகிறது. தற்போதைய வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சி அமைச்சகத்தின் அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி மற்றும் இணை அமைச்சர் பி. எல். வர்மா ஆவார்.[3]
Remove ads
செயல்பாடுகள் மற்றும் பொறுப்புகள்
வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை 2001இல் உருவாக்கப்பட்டது மற்றும் மே 2004இல் ஒரு முழு அளவிலான அமைச்சகத்தின் தகுதியைப் பெற்றது. இந்த அமைச்சகம் முக்கியமாக வடக்கு-கிழக்கு பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதில் அக்கறை கொண்டுள்ளது.
முக்கியச் செயல்பாடுகள்
வடகிழக்கு இந்தியாவின் மாநில அரசுகளுடன், பிற மத்திய அமைச்சகங்களுடன் ஒருங்கிணைப்பு ஏற்படுத்துகிறது.
நிறுவனங்கள்
அமைச்சகத்தின் கீழ் பின்வரும் அமைப்புகள் செயல்படுகின்றன:
- வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு நிதி நிறுவனம்
- வடகிழக்கு பிராந்திய வேளாண் சந்தைப்படுத்தல் கழகம்
- சிக்கிம் சுர்ங்க நிறுவனம்
- வடகிழக்கு கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads