மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, வடக்கு வழித்தடம்

வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் வடக்குப் பகுதி வழித்தடம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, வடக்கு வழித்தடம் E1  (ஆங்கிலம்: North–South Expressway Northern Route (E1); மலாய்: Lebuhraya Utara–Selatan Jajaran Utara (E1)) என்பது தீபகற்ப மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் வடக்குப் பகுதி வழித்தடம் ஆகும். தீபகற்ப மலேசியாவின் வடமேற்கு கடற்கரைக்கு இணையாகச் சரிசமமான நிலையில் செல்கிறது.

விரைவான உண்மைகள் மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலைவடக்கு வழித்தடம் (மலேசியா)North–South Expressway Northern Route Lebuhraya Utara–Selatan Jajaran Utara, வழித்தடத் தகவல்கள் ...
Thumb
வழித்தடம்

இந்த விரைவுச்சாலையின் நீளம் 460-கி.மீ. (290-மைல்). வடமேற்கு மாநிலங்களான கெடா, பினாங்கு, பேராக் மற்றும் சிலாங்கூர் மாநிலங்களின் வழியாக இந்தச் சாலை செல்கிறது.

Remove ads

பொது

இந்த விரைவுச்சாலை மலேசியா-தாய்லாந்து எல்லையில், கெடா, புக்கிட் காயூ ஈத்தாம் சோதனைச் சாவடியில் தொடங்குகிறது. பின்னர் சிலாங்கூர், புக்கிட் லஞ்சான் கிராமப்புறப் பகுதியில் முடிவடைகிறது.

அங்கு கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச் சாலையுடன் இணைகிறது. இந்த வடக்கு-தெற்கு விரைவுச்சாலை பிளஸ் விரைவுச்சாலைகள் நிறுவனத்தின் (PLUS Expressways) மூலமாக இயக்கப் படுகிறது.

இந்த நெடுஞ்சாலை, மலாயா தீபகற்பத்தின் வடமேற்கு கடற்கரைக்கு அருகில் வடக்கு-தெற்கு திசையில் செல்கிறது. அலோர் ஸ்டார், பட்டர்வொர்த், தைப்பிங், ஈப்போ மற்றும் ரவாங் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களையும் இணைக்கிறது.

அதே வேளையில் அதன் வழித்தடத்தில் பல கிராமப் புறங்களுக்கும் சாலை அணுகலை வழங்குகிறது. தீபகற்ப மலேசியாவில் இதுவே மிக நீளமான விரைவுச்சாலை ஆகும்.

Remove ads

முக்கிய அம்சங்கள்

மலேசியாவின் இரண்டாவது நீளமான பாலமான பினாங்கு பாலம், சுங்கை பேராக் பாலம் (Jambatan Sultan Azlan Shah), மெனோரா சுரங்கப்பாதை (Menora Tunnel) மற்றும் ரவாங் ஓய்வு சேவை மையத்தில் (Rawang Rest and Service Area (R&R) உள்ள வடக்கு-தெற்கு விரைவுச்சாலை நினைவுச்சின்னம் போன்றவை இந்த விரைவுச்சாலையின் முக்கிய அம்சங்களாகும்.

இந்த வடக்கு-தெற்கு விரைவுச்சாலை வலையமைப்பில் கோப்பேங்-தாப்பா பகுதி தான் அதிகம் செலவான பகுதியாகும். அத்துடன் அந்தப் பகுதி சற்று ஆபத்தான பகுதியாகவும் கருதப்படுகிறது.

இந்த வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் இரண்டு ஆபத்தான நீட்சிகள் உள்ளன: முதலாவது சங்காட் ஜெரிங்-ஜெலாப்பாங் (Changkat Jering-Jelapang) நீட்சி; இரண்டாவது கோப்பேங்-தாப்பா (Gopeng-Tapah) நீட்சி.

கனரக வாகனங்களுக்குத் தடை

இந்த வடக்கு-தெற்கு விரைவுச்சாலை வடக்கு வழித்தடத்தில் ரவாங் நகரில் இருந்து புக்கிட் லாஞ்சான் வரைக்கும்; வேலை நாட்கள் நேரங்களில்; ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

திங்கள் கிழமை முதல் வெள்ளிக் கிழமை வரை (பொது விடுமுறை நாட்கள் தவிர) காலை 6:30 மணி முதல் 9:30 மணி வரை, 10,000 கிலோ அல்லது அதற்கும் மேற்பட்ட எடையுள்ள கனரக வாகனங்கள் (பேருந்துகள் மற்றும் நீர்க் கலச்சுமையுந்துகள் (Tankers) தவிர); இந்த விரைவுச் சாலைக்குள் நுழைய அனுமதிக்கப்படுவது இல்லை. விதியை மீறும் கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.[1]

Remove ads

மேற்கோள்கள்

மேலும் பார்க்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads