மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, மத்திய இணைப்பு
மலேசியாவில் உள்ள ஒரு விரைவுச்சாலை. இதற்கு எலைட் '''(ELITE)''' எனும் பெயரும் உண்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, மத்திய இணைப்பு அல்லது மத்திய இணைப்பு விரைவுச்சாலை (ஆங்கிலம்: North–South Expressway Central Link; மலாய்: Lebuhraya Utara–Selatan Hubungan Tengah) என்பது மலேசியாவில் உள்ள ஒரு விரைவுச்சாலை. இதற்கு எலைட் (ELITE) எனும் பெயரும் உண்டு.
இந்த விரைவுச்சாலை சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சா ஆலாம் நகருக்கும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள நீலாய் நகருக்கும் இடையே செல்கிறது.[1]
இந்த விரைவுச் சாலையானது; புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகிய இடங்களுக்கான முதன்மை அணுகல் பாதையாகவும் செயல்படுகிறது.[2]
Remove ads
பொது
வடக்கு-தெற்கு விரைவுசாலை (மலேசியா) எனும் மலேசியாவின் பிரதான விரைவுச்சாலையில் இரு பிரிவுகள் உள்ளன.
- 1. வடக்கு-தெற்கு விரைவுசாலை (வடக்கு)
(North–South Expressway Northern Route)
- 2. வடக்கு-தெற்கு விரைவுசாலை (தெற்கு)
(North–South Expressway Southern Route)
இந்த இரு பிரிவுகளையும் மத்திய இணைப்பு விரைவுச்சாலை இணைத்துச் செல்கிறது. அந்த வகையில் மாநிலங்களைக் கடந்து (Interstate Traffic); வடக்குப் பகுதிக்குச் செல்லும் வாகனங்களும்; தெற்குப் பகுதிக்குச் செல்லும் வாகனங்களும்; கோலாலம்பூர் மாந்கரத்திற்குள் செல்லாமல் கடந்து செல்ல முடியும்.
வாகனங்கள் கோலாலம்பூர் மாநகரத்திற்குள் செல்வதைத் தவிர்ப்பதற்காகவும்; கோலாலம்பூரில் வாகன நெரிசலைக் குறைப்பதற்காகவும் இந்த மத்திய இணைப்பு விரைவுச்சாலை 1996-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
Remove ads
வரலாறு
வடக்கு-தெற்கு விரைவுசாலைக்கான புதிய விரைவுச்சாலை (மத்திய இணைப்பு விரைவுச்சாலை) அமைப்பது பற்றி 1994-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
1994 மார்ச் மாதம் மத்திய இணைப்பு விரைவுச்சாலையின் கட்டுமானம் தொடங்கப்பட்டது. 1997 ஆகஸ்டு மாதம் நிறைவடைந்தது. முதல் பகுதி, சா ஆலாம் மற்றும் யூ.எஸ்.ஜே. (USJ) சுபாங் ஜெயா நகரங்களுக்கு இடையில், 1996 ஜூன் மாதம் திறக்கப்பட்டது.
2000-ஆம் ஆண்டில் புத்ராஜெயா இணைப்பு
1997 அக்டோபர் மாதம், மத்திய இணைப்பு விரைவுச்சாலையின் எஞ்சிய பகுதி, போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. 2000-ஆம் ஆண்டில் புத்ராஜெயா நகருக்கான இணைப்பு திறக்கப்பட்டது.
2013 பிப்ரவரி 28-ஆம் தேதி, மத்திய இணைப்பு விரைவுச் சாலையின், புத்ராஜெயா இணைப்பில் பண்டார் நுசா புத்ராவுக்குச் செல்லும் சந்திப்பில் முழுமை அடையாத ஒரு பாலம் தண்ணீர் குழாய் கசிவு காரணமாக இடிந்து விழுந்தது. உயிர்ச் சேதமோ காயமோ ஏற்படவில்லை.
Remove ads
காட்சியகம்
- மத்திய இணைப்பு விரைவுச்சாலையின் நீலாய் நகரச் சந்திப்பு
- நெகிரி செம்பிலான் - சிலாங்கூர் மாநிலங்களின் எல்லை
- புத்ராஜெயா இணைப்பு
- வடக்கு நீலாய் சந்திப்பு.
மேற்கோள்கள்
மேலும் பார்க்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads