நீலாய்

நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia

நீலாய்
Remove ads

நீலாய் (மலாய்: Nilai; ஆங்கிலம்: Nilai; சீனம்: 汝来); என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில், சிரம்பான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம். சிலாங்கூர் மாநிலத்திற்கு அருகாமையில் அமைந்து உள்ளது.

விரைவான உண்மைகள் நீலாய், நாடு ...

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு அருகாமையில் இருப்பதால், இந்த நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது.[1]

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரான சிரம்பான் நகரத்திற்கும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள காஜாங் நகரத்திற்கும் இடையே கிட்டத்தட்ட பாதி தூரத்தில் நீலாய் நகரம் உள்ளது. மேலும் அந்த இரண்டு நகரங்களையும் இணைக்கும் இரயில்பாதையின் வழியிலும் இந்த நகரம் அமைந்து உள்ளது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகர் சிரம்பானில் இருந்து தெற்கே 20 கி.மீ. தொலைவிலும்; கோலாலம்பூர் மாநகரில் இருந்து தெற்கே 50 கி.மீ. தொலைவிலும்; நீலாய் நகரம் அமைந்து உள்ளது.

Remove ads

பொது

நீலாய் அதன் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களுக்குப் பெயர் பெற்றது. நெகிரி செம்பிலான் அரசாங்கம் 1990-களில் இந்த நகரத்தை கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாக மாற்ற முடிவு செய்தது.[1]

இந்த நகரத்தில் வளர்ச்சித் திட்டங்கள் நிறையவே காணப் படுகின்றன. மலேசியாவின் மிகவும் பிரபலமான சில கல்லூரிகளும் மற்றும் இரண்டு பல்கலைக்கழகங்களும் இங்கு உள்ளன:[1]

  • நீலாய் பல்கலைக்கழகம் (Nilai University)
  • இந்தி அனைத்துலகப் பல்கலைக்கழகம் (INTI International University)
  • மணிப்பால் அனைத்துலகப் பல்கலைக்கழகம் (Manipal International University)
  • மலேசிய இஸ்லாமிய அறிவியல் பல்கலைக்கழகம் (Universiti Sains Islam Malaysia)
  • மலேசிய இஸ்லாமிய பல்கலைக்கழகக் கல்லூரி (Islamic University College of Malaysia)
  • முர்னி அனைத்துலகச் செவிலியர் கல்லூரி (Murni International Nursing College)
  • இங்கிலாந்து எப்சம் கல்லூரி (UK Epsom College)
  • நீலாய் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் (Nilai Cancer Institute Research Centre)

இதன் விளைவாக, உலகம் முழுவதிலும் இருந்து 30 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த நகரில் உயிர்க்கல்வி பயில்கிறார்கள்.

Remove ads

மக்கள் தொகையியல்

நீலாய் நகரத்தில் பெரும்பான்மையானவர்கள் சீனர்கள் 46%; அடுத்த நிலையில் மலாய்க்காரர்கள் 31%; மூன்றாவது நிலையில் இந்தியர்கள் 22%.

நீலாய் வட்டாரத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்

மலேசியா, நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டம், நீலாய் வட்டாரத்தில் 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 693 மாணவர்கள் பயில்கிறார்கள். 61 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

மேலதிகத் தகவல்கள் பள்ளி எண், இடம் ...

நீலாய் தட்பவெப்ப நிலை

நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டத்தில் அமைந்துள்ள நீலாய் நகரத்தின் தட்பவெப்ப நிலை.[2]

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், 2ஈலாய், மாதம் ...
Remove ads

நீலாய் காட்சியகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads