வடக்கு ஜகார்த்தா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வடக்கு ஜகார்த்தா (இந்தோனேசியா: ஜகார்த்தா உத்தாரா) இந்தோனேசியாவின் ஜகார்த்தா சிறப்புத் தலைநகரப் பகுதியை உருவாக்கும் ஐந்து நிர்வாக நகரங்களில் ஒன்றாகும். ஜகார்த்தா சிறப்பு மாவட்டத்தில் வடக்கு ஜகார்த்தாவிலேயே கடலோர பகுதிகள் யாவும் உள்ளடக்கியுள்ளன. வடக்கு ஜகார்த்தாவில், சிலிவாங் ஆற்றின் கரையோரத்தில் ஒரு பகுதி தருமனகாரா பேரரசின் பிரதான துறைமுகமாக இருந்து பின்னர் இது ஜகார்த்தாவாக வளர்ந்தது. பல வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களும் ஜகார்த்தாவின் சிறப்பம்சங்களும் வடக்கு ஜகார்த்தாவில் காணப்படுகின்றன. தஞ்சுங் பிரியோக்கு, வரலாற்றுச் சிறப்புமிக்க சுண்டா கெளாப்பா ஆகிய இரண்டு துறைமுகங்களும் இந்த நகரத்தில் அமைந்துள்ளன. தஞ்சுங் பிரியோக்கு நிர்வாக மையமாக உள்ள வடக்கு ஜகார்த்தாவில் 2010 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 1,645,312 மக்கள் வசிக்கிறார்கள்
வடக்கு ஜகார்த்தா ஜகார்த்தாவின் உண்மையான இயற்கை சதுப்பு நிலங்களில் சிலவற்றைக் கொண்டுள்ளது. நகரம் உருவாக்கப்பட்ட போது இந்த சதுப்பு நிலத்தின் சில பகுதிகள் நகர்ப்புறங்களாக மாற்றப்பட்டன. இருப்பினும், 400 ஹெக்டேர் பரப்பளவில் அலையாத்தி மரக்கன்று நடுவதற்கான ஒரு காடுகள் மறுசீரமைப்பு திட்டம் ஏற்கனவே செயற்படுத்தப்பட்டு 2012 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டு உள்ளது. கடற்கரைப் பகுதியில் குறிப்பாக பந்தாய் இண்டா கபுக் பகுதி முழுவதும் கடல் அரிப்பைக் குறைப்பதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். [1]
வடக்கு ஜகார்த்தா வடக்கில் சாவகக் கடல்; கிழக்கே பெக்காசி; தெற்கில் மேற்கு ஜகார்த்தா, மத்திய ஜகார்த்தா, கிழக்கு ஜகார்த்தா என்பன; மேற்கில் தஙராங் என்பவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது.
Remove ads
வரலாறு

இப்போதைய ஜகார்த்தா நகரம் வடக்கு ஜகார்த்தாவிலிருந்து விரிவாகிய பகுதியாகும். 5 ஆம் நூற்றாண்டில் சிலியுங்-ஆங்கீ ஆற்றின் முகத்துவாரத்தில் துறைமுக நகரான சுந்தபுரா (இப்போது டகூ, ஜகார்த்தா மற்றும் பெக்காஸிக்கு அருகில்) அரசன் முலாவர்மன் தலைமையிலான தருமனிகரா இராச்சியத்தின் பிரதான துறைமுகமாகும்.
16 ஆம் நூற்றாண்டின் போது, இப்போது வட ஜகார்தாவின் பகுதிகளைக் கொண்டிருந்த நகரம் ஜெயகார்த்தா என்று அழைக்கப்படுகிறது. ஜெயகார்தாவில் அரசாங்கத்தின் அமைப்பு, ஆட்சியாளர்களின் மாற்றங்கள் மற்றும் நிர்வாக பகுதியின் மாற்றங்கள் உட்பட்ட காரணங்களால் பல முறை மாற்றப்பட்டது. இந்த பகுதி மூன்று வடிவிலான அரசாங்கங்களைக் கொண்டுள்ளது: முதலாவது, ஜெயகர்த்தா மன்னரின் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படும் நகர அரசாங்கம் (இப்பகுதி இப்போது ஆங்கி துறைமுகத்தில் அமைந்துள்ளது). இரண்டாவதாக, ஜெயகர்த்தா ஆட்சியின் கீழ் உள்ள சிற்றரசர்களால் கட்டுப்படுத்தப்படும் மாநில அரசு (இப்பகுதி தற்போது பசார் இக்கன் மற்றும் கோட்டாவில் உள்ளது. மூன்றாவதாக, உலகளாவிய அரசாங்கம் (இப்பகுதி தற்போது தஞ்சுங் ப்ரியோக் என்ற இடத்தில் உள்ளது.
Remove ads
துணை மாவட்டங்கள்
வட ஜகார்த்தா கீழ்கானும் ஆறு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டள்ளன.
- சிலிஞ்சிங் (Cilincing)
- கிலாப்பா காடிங் (Kelapa Gading)
- கொஜா (Koja)
- படெமாஙான் (Pademangan)
- பெஞ்சரீஙான் (Penjaringan)
- தாஞ்சூங் ப்ரியுக் (Tanjung Priok)
சுற்றுலா


வடக்கு ஜகார்த்தா அரசாங்கம் வடக்கு ஜகார்த்தாவின் சுற்றுலா மறுசீரமைப்பிற்காக 12 கடற்கரை சுற்றுலாத் திட்டங்களை செயல்படுத்துகிறது. (இந்தோனேசியா: 12 Jalur Destinasi - Wisata Pesisir Jakarta Utara [2][3])) அந்த 12 இடங்கள் பின்வருமாறு,
- முரா ஆங்கி வனவிலங்கு சரணாலயம்
- முரா ஆங்கி மீன்பிடித் துறைமுகம்
- சுந்தா கெலாப துறைமுகம்
- லுவார் பதங் மசூதி
- மங்கா துவா கடைவல மாவட்டம்
- தமன் இம்பியன் ஜியா அன்கல்
- பெத்தெரா ஜெயா
- தஞ்சுங் பிரியோக் நிலையம்
- ஜகார்த்தா இசுலாமிய மையம்
- சி பிட்டங்கின் இல்லம் மற்றும் அல் அலாம் மசூதி
- துகு தோவாலயம்
- கெலப்பா கடிங் கடைவல மையம்
விளையாட்டரங்கம்
பழைய லெபக் புளுஸ் விளையாட்டரங்குக்கு மாற்றாக மே 28, 2014 அன்று, 12.5 ஹெக்டேர் பரப்பளவில் ஒரு புதிய மைதானம் கட்டப்பட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டள்ளன. அந்தப் பழைய மையதானம் ஜகார்த்தா துரிதப் போக்குவரத்துப் பெருந்திட்திட்டத்திற்காக இடிக்கப்பட்டுள்ளது. புதிய விளையாட்டரங்கத் திட்டம் 1.2 டிரில்லியன் ($ 103.2 மில்லியன்) செலவாகும் என மதிப்பிடப்பட்டள்ளது. 50,000 இருக்கைகளைக் கொண்ட நவீன பிரதான அரங்கம், 2 பயிற்சியளிக்கும் களங்கள் உட்பட ஒரு நீர் பூங்கா, ஒரு தடகளப்பாதை, ஒரு இருசக்கர வாகனப்பதை, ஒரு கண்காட்சி மண்டபம் மற்றும் பிற பொழுதுபோக்கு வசதிகள் இந்த அரங்கத்தைச் சுற்றியுள்ளன. 2017 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த திட்டம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads