வட்டக்கச்சி ரங்கநாதப்பெருமாள் கோவில்
இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள ஒரு பெருமாள் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அருள்மிகு ஸ்ரீ ரங்கநாதப்பெருமாள் ஆலயம் இலங்கையின் வடமாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வட்டக்கச்சி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.
அமைப்பு
ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதப்பெருமாள் இவ்வாலயத்தின் மூலமூர்த்தியாக மூலஸ்தானத்தில் வீற்று இருக்கிறார். அதேவேளை தெற்கு வாயிலை நோக்கியபடி சயனித்தபடி உள்ள ஸ்ரீரங்கநாதப்பெருமாளின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை ஆலய உள்பிரகாரத்தில் விநாயகர், லட்சுமி, ஆஞ்சநேயர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் அமைந்துள்ளன. ஆழகிய சிற்ப வேலைப்பாடுகள்மிக்க விமானமும் தெற்குவாசலில் அழகிய இரண்டு கோபுரங்களும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஆலயத்தின் தீர்த்தமாக சித்தாமிர்ததீர்த்தம் (மம்மில்குளம்) விளங்குகின்றது.
Remove ads
பிரமோற்சவம்
கிளிநொச்சி மாவட்டத்தில் புகழ் மிக்க இவ்வாலயத்தின் பிரமோற்சவமானது ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி நாளை ஒன்பதாம் நாள் தேர் திருவிழாவாக கொண்டு பன்னிரண்டு நாட்கள் நடைபெறும். இவ் உற்சவத்தின்போது முதலாம்நாள் கொடியேற்றமும்,இரண்டாம்நாள் ஸ்ரீராம வடிவமும், மூன்றாம்நாள் லக்ஷ்மிநாராயணர் உற்சவமும், நான்காம்நாள் ஆனந்தசயனர் உற்சவமும், ஐந்தாம்நாள் ஆண்டாள் உற்சவமும், ஆறாம்நாள் பகல் மோகினிவடிவும், அன்று இரவு அரிகர வடிவமும், ஏழாம்நாள் வெண்ணெய் திருவிழாவும், எட்டாம் நாள் வேட்டைத் திருவிழாவும் அன்றிரவு சப்பறத் திருவிழாவும் இடம்பெறும், ஒன்பதாம் நாள் தேர்உற்சவம் நடைபெற்று அன்றிரவு உறியடி உற்சவமும், பத்தாம்நாள் தீர்த்தத் திருவிழா ஆலய தீர்த்தமான சித்தாமிர்த தீர்த்தத்தில் இடம்பெறும். அன்றிரவு கொடியிறக்கமும், பதினோராம்நாள் பகல் சங்காபிசேகமும் இரவு பூங்கவனத்திருவிழாவும் (திருக்கல்யாணம்) இடம்பெறும் கடைசிநாள் ஆஞ்சநேயர் உற்சவம் இடம்பெறும்.
அதேவேளை மார்கழி மாத திருப்பாவையும் வைகுண்ட ஏகாதசி உற்சவமும் இங்கே சிறப்பாக இடம்பெறும். ஞாயிறு தோறும் ஆலயத்தில் மதியம் மற்றும் மாலையில் சிறப்புப் பூசை இடம்பெறும்.
Remove ads
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads