வணக்கம்டா மாப்ள

மு. இராசேசு இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

வணக்கம்டா மாப்ள
Remove ads

வணக்கம்டா மாப்ள (VanakkamDa Mappilei) என்பது 2021 ஆண்டு தமிழ் மொழியில் வெளியான காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். மு. இராசேசு எழுதி இயக்கியிருந்த இந்த படத்தில் ஜி. வி. பிரகாஷ் குமார், அமிர்தா ஐயர், ஆனந்தராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். சன் நெக்ட்ஸ்|இது 16 ஏப்ரல் 2021 அன்று சன் நெக்ட்ஸ் வழியாக வெளியிடப்பட்டு, விமர்சகர்களிடமிருந்து மிகவும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

விரைவான உண்மைகள் வணக்கம்டா மாப்ள, இயக்கம் ...
Remove ads

தயாரிப்பு

கடவுள் இருக்கான் குமாரு (2016) படத்திற்குப் பிறகு இயக்குநர் மு. இராசேசு, ஜி.வி. பிரகாஷ் குமார் இருவரும் இணைந்த இரண்டாவது கூட்டணியாகும்.[1] நெட்டிசனால் உருவாக்கப்பட்ட பிரபலமான டிக்டாக் மீம்ஸை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்திற்கு 'வணக்கம்டா மாப்ள' என்று பெயரிடப்பட்டது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு காலத்தில் வைரலானது.[2] இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2021 இல் நிறைவடைந்தது.

ஒலிப்பதிவு

படத்திற்குப் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். "டாடா பை பை" என்ற முதல் பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். பாடல் வரிகளை கானா வினோத் எழுதியுள்ளார்.[1]

விடுதலை

இந்தப் படம் சன் தொலைக்காட்சியில் 14 ஏப்ரல் 2021 அன்று தமிழ்ப் புத்தாண்டு அன்று நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என்று முதலில் திட்டமிடப்பட்டது.[3] இருப்பினும், திரைப்பட தயாரிப்பாளர்கள் பின்னர் வெளியீட்டு தேதியை மே 1, 2021, மே தினத்திற்கு தள்ளினர்.[4] பின்னர் இந்தத் திட்டமும் கைவிடப்பட்டது. அதற்குப் பதிலாக 16 ஏப்ரல் 2021 அன்று சன் NXT வழியாக படம் நேரடியாக வெளியிடப்பட்டது.[5] இந்தத் திரைப்படம் 12 மே 2021 அன்று ரம்ஜானை முன்னிட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.[6]

வரவேற்பு

படம் வெளியாகி எதிர்மறை விமர்சனத்தை எதிர் கொண்டது.[7][8]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads