வந்தாளே மகராசி

கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

வந்தாளே மகராசி
Remove ads

வந்தாளே மகராசி 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் எழுதி, தனது சொந்த ஸ்டூடியோவில் இயக்க, சங்கர் கணேஷ் இசை அமைத்தார்.[1] இந்தத் திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா (இரட்டை வேடம்), வி. எஸ் ராகவன், சோ. ராமசாமி, புஷ்பலதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]

விரைவான உண்மைகள் வந்தாளே மகாராசி, இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

  • ஜெயலிலதா - லட்சுமி / ராணி
  • ஜெய்சங்கர் - டாக்டர். சுந்தரம்
  • எம். என். ராஜம் - மங்கம்மா
  • சோ. ராமசாமி
  • வி. எஸ். ராகவன்
  • சி. கே. சரஸ்வதி
  • எஸ். என். லட்சுமி
  • பகவதி
  • வி. கோபாலகிருஷ்ணன்
  • மாஸ்டர் ஸ்ரீதர்
  • நடராசன்
  • எஸ். ஆர். ஜானகி
  • கே. விஜயன்

கதைச்சுருக்கம்

பெற்றோர் இல்லாதா மருத்துவர் சுந்தரம் (ஜெய்சங்கர்) கிராம வாசிகளுக்கு சேவை செய்ய வருகிறார். அங்கே, மங்கம்மாவும் (எம். என். ராஜம்) அவரது தாயும் (சி. கே. சரஸ்வதி) சேர்ந்து செய்யும் மனிதநேயமற்ற காரியங்களை கண்டு அதிர்ந்து போகிறார் சுந்தரம். மங்கம்மாவின் வீட்டில், கணவர் சிவலிங்கம் (வி. எஸ் ராகவன்), மாமியார் (எஸ். ஆர். ஜானகி), சகோதரன் (சோ ராமசாமி) ஆகியோர் இருந்தனர். உமாவையும் (புஷ்பலதா) அவளது குழந்தைகளையும் துன்புறுத்துகிறார் மங்கம்மா. மங்கம்மாவின் சகோதரனை ஆசிரியை லக்ஷ்மி (ஜெயலலிதா) மணக்கிறார். லட்சுமியையும் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துகிறார் மங்கம்மா.

அந்நிலையில், லட்சுமி போன்ற முகஜாடை கொண்ட ராணியை (ஜெயலலிதா) சுந்தரம் சந்திக்க நேரிடுகிறது. மங்கம்மாவிற்கு ஒரு நல்ல பாடம் புகட்ட முடிவு செய்கிறார் சுந்தரம். அதனால், ராணியை லட்சுமியாக ஆள் மாற கோரிக்கை விடுத்தார். ஒப்புக் கொண்ட ராணி, மங்கம்மா வீட்டிற்கு லட்சுமியாக செல்கிறாள். லக்ஷ்மியின் திடீர் சுபாவ மாற்றத்தை கண்டு மங்கம்மா குடும்பம் அதிர்ந்து போனது. ஆள் மாறாட்டத்தை மங்கம்மா கண்டுபிடித்தாரா? ராணியின் உதவியுடன் மங்கம்மாவிற்கு சுந்தரம் பாடம் புகட்டினாரா? போன்ற கேள்விகளுக்கு விடை காணுதலே மீதிக் கதையாகும்.

Remove ads

இசை

வாலி எழுதிய பாடல் வரிகளுக்கு, சங்கர் கணேஷ் இசை அமைத்தனர்.[1]

  1. துணிவே துணை - பி. சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன்
  2. எத்தனையோ பேய் இருக்கு - எல். ஆர். ஈஸ்வரி
  3. ராக்கம்மா ராணி - டி. எம். எஸ், சீர்காழி கோவிந்தராஜன்
  4. கண்களில் ஆயிரம் - டி. எம். எஸ், ஜெயலலிதா
  5. அட மாயாண்டி முனியாண்டி - எம். தங்கப்பன்

வெளி-இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads