வரிவடிவம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வரிவடிவம் (grapheme) என்பது எழுத்து மொழியின் அடிப்படை அலகு ஆகும். இது, எழுத்துக்கள்; எண்கள்; முற்றுப்புள்ளி, காற்புள்ளி முதலிய குறியீடுகள் போன்ற உலக எழுத்து மொழியில் உள்ள எல்லாத் தனித்தனிக் குறிகளையும் உள்ளடக்கும்.
ஒலியன் எழுத்தமைவு (phonemic orthography) முறையில் வரிவடிவங்கள் ஒலியன்களோடு ஒத்து அமைகின்றன. ஒலியன்களோடு முழுமையாக ஒத்துவராத எழுத்துக் கூட்டல் முறைகளைக் கொண்ட ஆங்கிலத்தைப் போன்ற எழுத்து முறைகளில் ஒரு ஒலியனுக்குப் பல வரிவடிவங்கள் இருப்பதுண்டு. இத்தகையவை இருகூட்டெழுத்து (digraph), முக்கூட்டெழுத்து (trigraph) என அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக "ship" என்னும் சொல்லில் "s", "h", "i", "p" என்னும் நான்கு வரிவடிவங்கள் உள்ளன எனினும், "s", "h" ஆகிய வரிவடிவங்கள் ஒருமித்து "sh" என்னும் ஒரு ஒலியனையே குறிப்பதனால் மூன்று ஒலியன்களே உள்ளன. "sh" ஒரு "இருகூட்டெழுத்து" ஆகும். சில வேளைகளில் ஒரு வரிவடிவம் இரண்டு ஒலியன்களை ஒருமித்துக் குறிப்பதும் உண்டு. எடுத்துக்காட்டாக, ஆங்கிலச் சொல்லான box (பாக்ஸ்) என்பதில் "x" என்னும் வரிவடிவம் "க்" "ஸ்" என்னும் இரண்டு ஒலியன்களைக் குறிக்கிறது.
ஒரு வரிவடிவம் ஒன்றுக்கு மேற்பட்ட மாற்று வரிவடிவங்களால் குறிக்கப்படக்கூடும். எடுத்துக் காட்டாக ஆங்கில மொழியில் "A", "a" போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
Remove ads
மேலும் காண்க
- மாற்றெழுத்து (Allograph)
- இருகூட்டெழுத்து (Digraph)
- முக்கூட்டெழுத்து (Trigraph)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads